பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 தமிழ் பயிற்றும் முறை

யனவாக இருக்க வேண்டும் ; கதையில் வரும் நிகழ்ச்சிகள் அவர்கள் நன்கு புரிந்து கொள்ளும்படி இருக்கவேண்டும். அன்றியும், கதையில் வரும் நிகழ்ச்சிகள் தெளிவாகவும், குறிக்கோளை யுடையனவாகவும் இருக்க வேண்டும். குழந்தைகளின் பட்டறிவை மீறிய கதைகளைக் குழந்தை களைக்கொண்டு நடிக்கச் செய்வதில் பயன் இல்லை.

தேர்ந்தெடுக்கப்பட்ட கதையை நாடகமாக்குவதில் குழந்தைகளின் பங்கு அதிகமிருத்தல் வேண்டும். குழந்தை. களின் கருத்துக்களுக்கு இடம் கொடுத்தல் வேண்டும். ஆசிரியரின் முன் கூட்டிய திட்டப்படிக் கதையை நாடகமாக்குவதால் பயன் ஒன்றும் இராது. இவ்வாறு குழந்தைகளைக்கொண்டு தீர்மானித்தலில் வழி விலகிப்போகக்கூடு. மென்று ஆசிரியர் கருதினுல், தம்முடைய யோசனேகளைக் கூறி அவர்களைச் சரியான முறையில் கொண்டுசெலுத்தலாம். பெரும்பாலும் சிறு குழந்தைகள் தம் தவறுகளை எளிதாகக் கண்டுகொள்வர். நாடகம் உருவாகிக் கொண்டிருக்கும் பொழுது நேரிடும் உச்சரிப்புப் பிழை, எழுத்துப் பிழை, சொற்ருெடர் அமைப்பில் நேரிடும் பிழைகள் ஆகியவற்றில் ஆசிரியர் சிலசமயம் தலையிட்டுத் திருத்தலாம். நாடகம் உருவாகும்பொழுது இதைச் செய்வதும் தவறு; ஒத்திகையின்பொழுது இத் தவறுகளைத் திருத்தலாம். பெரும்பாலும் குழந்தைகளே நாடகத்தைத் தயாரித்தல் நன்று. ஆளுல், சில சமயங்களில் குழந்தைகளின் நிலைக்கும், பட்டறிவிற்கும் ஏற்றபடி எழுதப்பெற்றுள்ள ஒரு சில நாடகங்களையும் நடிக்கச் செய்யலாம். பெரும்பாலும் அவற்றைப் புத்தகங்களிலிருந்து பொறுக்குவதைவிட, ஆசிரியரே எழுதுதல் நன்று. அந் நாடகங்கள் குழந்தைகளின் தவறுகளைத் திருத்தி நேரான வழிகளில் உய்ப்பதைத் தவிர, தமக்கு உகந்தவை எத்தகையனவாக இருக்க வேண்டும் என்பதையும் காட்டும்.

ஆசிரியர் முன் ஆயத்தமில்லாமலேயே ஒரு கதையை நடிக்கும் வாய்ப்பினே வகுப்பிற்கு நல்கலாம். ஒரு கதையை