பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. பயிற்று முறைகள்-(2)

சென்ற இயலில் ஆராய்ந்தவை போக எஞ்சியுள்ள ஐந்து முறைகளைப்பற்றி இந்த இயலில் ஓரளவு அறிந்துகொள்ளுவோம்.

1. தனிப் பயிற்சி முறை

வகுப்பு முறையின் குறைகள் : உளவியற் கலையின் வளர்ச்சியால் குழந்தைகளைப்பற்றிப் பல உண்மைகளே அறிந்த பிறகும் குழுவாகக் கற்பிக்கும் முறை நடைமுறையில் இருக்கத் தான் செய்கின்றது. உளவியற்கலே குழந்தைகளைப்பற்றிப் பல உண்மைகளே நமக்குத் தந்திருக்கின்றது. பள்ளியில் பயிலும் குழந்தைகளின் திறன் ஒரே மாதிரியாக இராது. சிலர் நிறைமதியுடையவர்களாகவும், சிலர் குறைமதியுடையவர்களாகவும், சிலர் நடுநிலை அறிவுடையவர்களாகவும் இருப்பர். இவ்வாறு வெவ்வேறு விதத் திறன்களையுடைய மாணுக்கர்களடங்கிய வகுப்பில் ஒரே விதமாகக் கற்பித்தல் நடைபெற்ருல், எல்லோருடைய தேர்ச்சியும் ஒரளவு பாதிக்கப்பெறும் ; நிறைமதியுடையோர் விரைவாக முன்னேறுவதற்கு வகையின்றி, வேலைசெய்ய வாய்ப்பின்றிப் பிறருக்காகக் காத்துக்கொண்டிருந்து சோம்பித் திரிவர். குறைமதியுடையோர் தேர்ச்சிக் குறைவினுல் உற்சாகத்தை இழப்பர். நடுநிலை அறிவுடையவர் இப்படியும் அப்படியுமின்றித் திண்டாடுவர். அன்றியும், வகுப்பிலுள்ள எல்லா மாணுக்கர்களும் ஒரே வேகத்தில் கற்கின்றனர் என்று கூறவும் இயலாது. குழந்தைகள் கற்பது அவர்களின் முன்னறிவு, உற்சாகம், மனப்பான்மை முதலிய பல கூறுகளைப் பொறுத்தது. ஒரு மாணுக்கன் தவிர்க்க முடியாத காரணத்தால் வகுப்பிற்குப் பல நாட்கள் வர முடியாது.