பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 36 தமிழ் பயிற்றும் முறை

வேண்டும். வகுப்பு முழுவதும் ஒவ்வோர் ஒப்படைப்புத்தாளேயும் ஒரே சமயத்தில் பெற முடியாது. , ஒவ்வொருவருடைய அறிவு நிலை, மனப்பான்மை, ஆர்வம் முதலியவற்றிற்கேற்றவாறு அதைப் பல சமயங்களில் பயன்படுத்துவர். ஒவ்வொருவரும் ஒப்படைப்புக்களே முடித்த தேதியை ஆசிரியர் தம் ஒப்படைப்பு விளக்க அட்டையில் குறித்துக் கொள்ளவேண்டும். இவ்வாறே மாணுக்கர்களும் தத்தம் ஒப்படைப்பு அட்டைகளில் தாம்தாம் ஒப்படைப்புக்களேப் பெற்ற தேதி, அவற்றை முடித்த தேதி ஆகியவற்றைக் குறித்துக் கொள்ளவேண்டும். மாணுக்கர்கள் அன்ருடப் பாடத்தை ஆயத்தம் செய்யும்பொழுதும், வீட்டு வேலையைச் செய்யும்பொழுதும், பள்ளியில் தமிழ்ப்பாட வேளையிலும் இவ் வொப்படைப்பு வேலையைச் செய்வர். பள்ளிக்கு வெளியே எவ்வெப்பொழுது இவ் வேலையைச் செய்யலாம் என்ற யோசனைக்குறிப்பை ஆசிரியர் மாணுக்கர்களிடம் தெரிவிக்கலாம். நடுநிலைப்பள்ளி வகுப்புக்களில் பள்ளிப் பாடவேளைகளிலேயே இவ் வேலையைச் செய்து முடித்து விடலாம். உயர்நிலைப்பள்ளி வகுப்புக்களில் வீட்டு வேலையைச் செய்யும் காலமும், பள்ளியின் தமிழ்ப் பாடத்துக்குரிய பாடவேளேயும் இவ்வொப்படைப்பு வேலைக்குப் போதுமானது. ஒப்படைப்புக்களைத் தயாரிக்கும்பொழுது ஒரு சராசரி மாணுக்கனே மனத்திற்கொண்டு தயாரிக்க வேண்டும். ஒப்படைப்புக்கள் தேவைக்கு வேண்டிய அளவுக்குச் சிறிதாக இருப்பினும் தவறு இல்லை ; பெரிதாகப் போகாது பார்த்துக்கொள்ளுதல் நலம்.

பள்ளியில் தமிழ்ப்பாடவேளைகளில் மாணுக்கர்கள் ஒப்படைப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும்பொழுது அவர்கள் ஆசிரியர் உதவியை வேண்டுங்கால் வாய்ப்புக்களைத் தாராளமாக அவர்களுக்கு நல்கவேண்டும். மாளுக்கர்கள் ஒருவரையொருவர் கலந்து யோசிக்கவும் இடந்தரலாம். ஆனல், அவர்கள் ஒருவரையொருவர் பார்த்தெழுதாமலிருக்கப் பார்த்துக்கொள்ள வேண்டும். மாணுக்கர்கள் நூலகத்திலுள்ள புத்தகங்களைத் தாராளமாகப் பயன்படுத்தும்