பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்.(2) 1 37

வாய்ப்புக்கள் இருக்கவேண்டும். எவரும் எந்த ஒப்படைப்பினே வேண்டுமானுலும் எடுத்துக் கொள்ளலாம். ஏதாவது ஓர் ஒப்படைப்பில் பல மாணுக்கர்களுக்கு விளங்காத நிலை ஏற்பட்டால் அவர்களேத் தனியே கூடும்படி செய்து அவர்களுக்கு அப் பகுதியைத் தெளிவாக விளக்கலாம். ஒரு மாணுக்கன் ஒரு குறிப்பிட்ட ஒப்படைப்பினே முடித்து விட்டால் ஆசிரியர் அவன் முடித்த பகுதியில் வாய்மொழி வினுக்களே மேற்கொண்டு, அவனது எழுத்து வேலையை மதிப்பிடலாம். சிறிது பட்டறிவு ஏற்பட்ட பிறகு ஆசிரியர் இவ் வேலையை விரைவில் முடிக்கலாம். மாணுக்கன் செய்த வேலையில் ஆசிரியர் திருப்தி அடைந்தால் அடுத்த ஒப்படைப்பினே அவனுக்குக் கொடுக்கலாம். அடுத்த ஒப்படைப்பு வேலையைத் தொடங்குவதற்கு முன்பு, முன் ஒப்படைப்பில் காட்டப்பெற்ற தவறுகளே அவன் திருத்திக் கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை இருக்கவேண்டும். அடுத்த ஒப்படைப்பு திருத்தத்திற்கு வருங்கால் முன் ஒப்படைப்பில் குறிப்பிடப்பெற்ற தவறுகள் திருத்தப் பெற்றுள்ளனவா என்பதை ஆசிரியர் கவனிக்கவேண்டும். எழுத்து வேலைகளைக் குறிப்பேட்டின் (Note book) வலது புறத்திலேயே செய்தால், இடது புறத்தைத் திருத்த வேலைக்கு வைத்துக்கொள்ளலாம்.

ஒரு மாளுக்கனுடைய ஒப்படைப்பு வேலையில் ஆசிரியர் மனநிறைவு அடையாவிட்டால், எந்த இடத்தில் சரியாக இல்லை என்பதை எடுத்துக்காட்டி அவனுக்கு வேண்டிய துணேபுரியலாம் ; பிறகு சரியாக முடித்து வருமாறு ஏவலாம். ஆசிரியர் ஒவ்வொருவருடைய அறிவுநிலைக்கேற்றவாறு வேலையின் அளவையும் நிலையையும் உயர்த்தவும் செய்யலாம் ; குறைக்கவும் செய்யலாம். தன்னிடமுள்ள ஒப்படைப்பு விளக்க அட்டையைக் கவனித்து விரைவாகக் கற்பவர்களையும் மெதுவாகக் கற்பவர்களையும் அறிந்து, மெதுவாகக் கற்பவர்களுக்குத் தேவையான அளவு உதவி புரியலாம். சில சமயம் பல மாணுக்கர்கள் ஒரே சமயத்தில் ஒப்படைப்பு வேலையை முடித்துவிட்டுக் கூட்டமாக வருதல்