பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 14 to

2. டால்ட்டன் திட்டம்

டால்ட்டன் திட்டம் தனிப் பயிற்சி முறையை அடிப்படையாகக் கொண்ட ஒரு முறை. ஒன்றுபட்ட அமெரிக்க நாடுகளில் மெசாசுசெட்ஸ் என்ற மாநிலத்தில் டால்ட்டன் என்னும் ஊரில் இம்முறை தோற்றுவிக்கப் பெற்றது. ஹெலன் பார்க் ஹர்ஸ்ட் என்னும் அம்மையார் இதனைத் தோற்றுவித்தார். வயதில் வேறுபட்ட முப்பது மாணுக்கர்களுக்குக் கற்பிக்கும் பொறுப்பினை ஏற்றபொழுது சிலருக்கு ஒப்படைப்புக்களைக் கொடுத்தும், சிலருக்குக் குழுக் குழுவாகக் கற்பித்தும் பணியாற்றி வந்தார். மாண்டிஸாரி அம்மையாரின் முறையை இவர் நன்கு அறிந்திருந்தார் ; எனவே, அம்முறையின் தொடர்ச்சியே தனது முறை என்று இந்த அம்மையார் கூறுகின்ருர். இந்தத் திட்டத்தைப் பெயரளவில் நாம் முறை என்று கூறினும் பாக் ஹர்ஸ்ட் அம்மையார் இதை ஒருமுறை என்ருே கல்வித் திட்டம் என்ருே கூருது இது கல்வியற்றிய ஒரு சீர்திருத்தம் என்றும், கல்வி கற்றல், கற்பித்தல் என்ற இரு செயல்களுக்கும் ஒரு தொடர்பு ஏற்படுத்தும் சாதனமே என்றும் கூறுகின்ருர்.

இம்முறையின் விளக்கம்: பள்ளியின் நடைமுறையைப் புதிய முறையில் அமைத்து, இம் முறையை எளிதில் மேற்கொள்ளலாம். இத் திட்டம் பாடத்திட்டத்தில் மாற்றம் விரும்பவில்லை; கற்பிக்கும் முறைகளில் ஒரு முறையையும் தழுவவில்லை. தனிப்பட்ட மாணுக்கனின் தேவைகளேயொட்டி இம்முறையைத் தொடங்கவேண்டும். இதல்ை எல்லா அறிவுநிலை மாணுக்கர்களும் பயன் அடைவர்.

டால்ட்டன் திட்டத்தில் வகுப்பு அறைகள் இல்லை : பாடவேளைப்பட்டிகள் இல்லை ; தேர்வுகள், வகுப்பு மாற்றம் முதலிய அதிர்ச்சிதரும் நிகழ்ச்சிகள் இல்லை; வகுப்பு ஆசிரியர் என்று ஒருவர் இரார். இங்கு வகுப்பு அறைகள் பாட ஆய்வகங்களாகி விடும் ; ஆசிரியர்கள்தாம் பாட வல்லுநர்கள் ; மாணுக்கர்கள் ஆய்வு நடத்துவோர். பாடப்