இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
142 தமிழ் பயிற்றும் முறை
- புத்தகங்களுக்குப் பதிலாக ஒப்படைப்புக்கள், தேர்ச்சிப் பதிவுத் தாள்கள் ஆகியவற்றைக் கையாளுவர். ஒவ்வொரு பாடத்திற்கும் தனித்தனி ஆய்வகம் உண்டு. அங்கு அப்பாடத்திற்கு வேண்டிய எல்லாப் பொருள்களும், எல்லா நூல்களும், எல்லாத் துணைக்கருவிகளும், பிற தேவைப் பொருள்களும் இருக்கும். எடுத்துக்காட்டாக தமிழ் ஆய்வகத்தில் தமிழ்ப் பேரகராதி (Tamil Lexicon), பல்வேறு அகராதி நூல்கள், அபிதான சிந்தாமணி, சங்க இலக்கியங்கள், புராணங்கள், ஐவகை இலக்கண நூல்கள், சில்லறைப் பிரபந்தங்கள், கம்பராமாயணம், வில்லிபாரதம், தனிப்பாடல் திரட்டு முதலிய மேற்கோள் நூல்கள் இருக்கும். ஆசிரியரது பேச்சும் கற்பித்தலும் பழைய முறைபோல் இங்கு இல்லை. ஆசிரியர் ஆழ்ந்து அகன்ற கல்வி அறிவுடையோராய் கல்லாலின்புடையமர்ந்த தென்முகக் கடவுள் போல் வீற்றிருப்பார். படிக்கும் சூழ்நிலையை நிலவச் செய்தல், ஒப்படைப்புக்களை விளக்குதல், குறிப்பிட்ட பொருள்களே எவ்வாறு படித்தல் என வழிகாட்டல், துணைக்கருவிகள் பற்றிய யோசனை கூறல், ஒரு குறிப்பிட்ட பொருளையும் பாடத்தில் அதன் தொடர்பையும் விளக்குதல் போன்ற செயல்களே மேற்கொள்ளலே அவரது செயலாக இருக்கும். மானுக்கர்கள் அடிக்கடி அவரிடம் சென்று தம்மிடையே தோன்றும் ஐயங்களே அகற்றிக்கொள்ளுவர்.
நடைமுறை : இம் முறையில் பாடவேளேப்பட்டி என்ற ஒன்று இல்லை. பள்ளி காலை 8.45 மணியிலிருந்து மாலை 4-30 மணிவரை நடைபெறும். பிற்பகல் 1-மணியிலிருந்து 2-மணிவரை உணவுகொள்ள ஒய்வு நேரம் உண்டு. எத்தனைப் பாடங்களுள்ளனவோ அத்தனே விதமான ஒப்பந்தங்கள் (Conracts) இருக்கும். ஒவ்வொரு மாணுக்கனும் ஒராண்டிற்குள் இத்தனே ஒப்பந்தங்கள் செய்து முடிக்க வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொள்வதால் இஃது இப் பெயர் பெற்றது. ஒரு பள்ளியாண்டில் எத்தனே மாதங்கள் இருக்கின்றனவோ அத்தனை ஒப்பந்தங்கள் ஒரு பாடத்திற்கு உண்டு. ஒன்பது மாதங்கள் கொண்ட ஒரு