பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 143

பள்ளி ஆண்டில் தமிழுக்கு மட்டிலும் ஒன்பது ஒப்பந்தங்கள் தரவேண்டியிருக்கும். ஒவ்வோர் ஒப்பந்தமும் நான்கு பிரிவுகளாகவும் (Periods), ஒவ்வொரு பிரிவும் ஐந்து உட்பிரிவுகளாகவும் (Units) பிரிக்கப் பெற்றிருக்கும். ஒவ்வொரு வார, மாத, ஆண்டுக்கும் ஆசிரியர் முன்னதாகவே ஒப்படைப்புக்களே அச்சிட்டு வழங்கிவிடுவார். இவ் வொப்படைப்புக்களே இத் திட்டத்தின் உயிர்நிலை என்று சொல்லவேண்டும். தனிப் பயிற்சி முறையில் ஒப்படைப்புக்களேப் பற்றி கூறிய விவரம் இங்கும் பொருந்தும்”. ஒவ்வொரு ஒப்படைப்பும் ஒரு சுருங்கிய முகவுரை, படிக்கவேண்டிய பகுதியில் எழுதவேண்டிய தலைப்பு, அதைப்பற்றி எழுத வேண்டிய குறிப்புக்கள், விடையிறுக்கவேண்டிய விளுக்கள், அவற்றிற்கெல்லாம் வேண்டிய மேற்கோள் நூல் விவரங்கள் முதலியவற்றைக் கொண்டதாயிருக்கும்.

முற்பகலில் மாணுக்கர்கள் தாம் விரும்பும் ஆய்வகங் களில் ஒப்படைப்பு வேலையில் ஈடுபட்டிருப்பர். பிற்பகலில் பாடவல்லுநரின் உசிதப்படி சிறு கூட்டங்கள், வாய்மொழிப்பயிற்சிகள், உடற் பயிற்சிகள் முதலியவை நடைபெறும். அப்பொழுது பாடவல்லுநர் மாணுக்கரின் பட்டறிவுக்கு அப்பாற்பட்ட, மேற்கோள் நூல்களில் காணமுடியாத, சில அரிய கருத்துக்கள் எவையேனுமிருந்தால் அவற்றைக் கூறுவார். ஒவ்வொரு வகுப்பிற்கும் ஒவ்வொரு பாடத்திலும் ஒரு மாதத்திற்குரிய ஒப்படைப்புக்கள் முன்னரே கொடுக்கப் பெறும். ஒரு மாதத்திற்குரிய எல்லாப் பாடங்களின் ஒப்படைப்புக்களையும் முடித்துவிட்டுத்தான் அடுத்த மாதத்திற்குரிய ஒப்படைப்புக்களைப் பெறுதல் வேண்டும். ஆளுல், ஒரு மாதத்திற்குள் பாடங்கட்குரிய ஒப்படைப்புக்களே மானுக்கர்கள் தத்தம் விருப்பப்படி செய்யலாம். தேவைக் கேற்றவாறு ஒரு பாடத்திற்கு அதிகக் காலத்தையும் இன்னுெரு பாடத்திற்குக் குறைவான காலத்தையும் செலவிடலாம். ஒப்படைப்பு வேலையில் ஈடுபட்டிருக்கும்பொழுது மானுக்கர்கள் அவரவர் விருப்பப்படி ஓர் ஆய்வகத்திலிருந்து

a gi prst ušali-138.