பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 தமிழ் பயிற்றும் முறை

மற்ருெரு ஆய்வகத்திற்குப் போகலாம் ; போய் ஆசிரியரையோ வேறு மாணுக்கரையோ அண்மித் தம் ஐயங்களைப் போக்கிக் கொள்ளலாம்.

தேர்ச்சி : பழைய முறையில் உள்ள தேர்வுகள் போன்றவை இங்கு இல்லை. மாணுக்கர்களின் தேர்ச்சி வரைபடங்கள் (Graphs) மூலம் அளக்கப்படுகின்றது. நான்கு வரை படங்கள் கையாளப் பெறுகின்றன. அவற்றில் இரண்டு படங்கள் மாணுக்கர்களிடமும், இரண்டு படங்கள் ஆசிரியர்களிடமும் இருக்கும். மாளுக்கர்களிடமிருப்பவற்றில் ஒன்று வாரத்தின் பாட வளர்ச்சியையும் மற்றென்று மாதத்தின் பாட வளர்ச்சியையும் காட்டும். ஆசிரியர்களிடமிருப்பனவற்றில் ஒன்று மாணுக்கர்கள் வந்த நாட்களையும், மற்ருென்று வகுப்பு மானுக்கர்களனைவரின் பாட வளர்ச்சியையும் தெரிவிக்கும். மாளுக்கர்கள் தம்மிடமுள்ள வரைபடங்களினுல் தாம் எப்பாடங்களில் எவ்வளவு தேர்ச்சி பெற்றிருக்கின்றனர் என்பதையும், எவற்றில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம். ஆசிரியர் தமது வரைபடங்களிலிருந்து எம் மாளுக்கன் தனியாகக் கவனிக்கப் பெறவேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ள இயலும். இவற்றிற்கெல்லாம் கண்னும் கருத்துமாகக் கண்காணிக்கும் ஆசிரியர்களின் மேற்பார்வை மிகவும் வேண்டற்பாலது. நடுநிலை உயர்நிலைப் பள்ளி வகுப்புக்களில் தமிழ்ப்படிப்பு, இலக்கணம், கட்டுரை, செய்யுட் பாடங்களில் இம்முறையை மேற்கொள்ளலாம். இன்றைய வகுப்புமுறைப் பயிற்றலிலேயே இத் திட்டத்தைச் சிறிது கையாளலாம். ஒவ்வொரு பாடம் தொடங்குவதற்குமுன்பு அப் பாடம்பற்றிய சில விளுக்களே ஆசிரியர் தயாரித்து அச்சிட்டு அல்லது கரும்பலகையில் எழுதி அவற்றின் விடைகளைக் கண்டறியுமாறு செய்யலாம். gog, Liru (Ulor otius'Dl-lity (Pre-lesson assignment) 6Tortoபடும். இவ்வாறே பாடம் முடிந்த பிறகு சில பயிற்சி வினுக்களைத் தந்து விடை எழுதச் செய்யலாம். இது LITLÉ-Esör Piliusot-ÜL (Post-lesson assignment) Gran Ci