பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

146 தமிழ் பயிற்றும் முறை

முறை வரைபடங்கள், மாளுக்கர் தம் தேர்ச்சி நிலையைத் தாமே அறியவும், பிற்போக்கு முற்போக்கு மாணுக்கர்களே ஆசிரியர் அறியவும், மாணக்கர் ஒருவரோடொருவர் போட்டியிட்டுக்கொண்டு வேலை செய்யவும் துணை செய்கின்றன.

சில குறைகள் : இத் திட்டத்தில் சில குறைகளும் காட்டப்பெறுகின்றன. மாணுக்கர்களுக்குத் தேவையான அளவு புத்தகங்கள் வாங்குவதற்குப் பணச்செலவு அதிகமாகும் ; தேவையான எல்லாப் புத்தகங்களும் தாய்மொழி. யில் கிடைக்கும் என்றும் சொல்வதற்கில்லே. தேவையான துணைக்கருவிகளைச் சேகரிப்பதும் கடினம். நம் நாட்டில் அதிகச் செலவில் இம் முறையைக் கையாளுவ தென்பது இயலாத காரியம். ஒப்படைப்புக்களே ஆயத்தம் செய்வதும் எளிதன்று பட்டறிவும் ஆழ்ந்த புலமையும் உடைய ஆசிரியர்களாலேயே அவற்றை ஆயத்தம் செய்ய முடியும். உடற்பயிற்சி, இசை, செய்யுள், வாய்மொழிப் பயிற்சி முதலியவற்றை இம் முறையால் கற்க இயலாது. ஆளுல் குறைகளேவிட நிறைகளே அதிகமாக இருப்பதாலும், கிடைக்கும் பயன்களும் அதிகமாக இருப்பதாலும் இம் முறையைக் கையாளலாம் என்று முறைவல்லார் கூறுவர்.

பழமையில் தோய்ந்து கிடக்கும் ஆசிரியர்கள் புதிய முறை எதையும் விரும்புவதில்லே. மேலே குறைகளாகக் கூறப்பெற்றவை அனைத்தும் ஆட்சி முறைப் பிரச்சினேகளே யன்றி உண்மையான குறைகளல்ல என்பதை எண்ணிப்பார்ப்பவர்களுக்கு எளிதில் புலனுகும்.

3. மாண்டிஸாரி முறை

இருபதாம் நூற்ருண்டில் தனித்தனிக் கற்றல் முறை செல்வாக்குப் பெற்று வருகின்றது. உளவியற் கலையின் வளர்ச்சியால் குழந்தைகளைப்பற்றிய பல அரிய உண்மைகள் கண்டறியப் பெற்றுள்ளன. ஒவ்வொரு குழந்தையும்