பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 1 47

ஒவ்வொருவித தனிவீறுடன் உள்ளது என்ற உண்மை கல்வி நிபுணர்களின் கருத்தைக் கவர்ந்துள்ளது. வகுப்பில் பல குழந்தைகளுக்குச் சேர்ந்தாற்போல் கற்பிப்பதால் குழந்தைகளைத் தனித்தனியாகக் கவனித்தல் இயலாது என்று அவர்கள் கருதலாயினர். இங்ங்ணம் குழுவாகக் கற்பிக்கும் முறை நீக்கப்பட வேண்டும் என்பதற்காகவே மாண்டிஸாரி முறை தோன்றலாயிற்று. இம்முறையின் நோக்கம் ஒவ்வொரு குழந்தையையும் தனித்தனியாகக் கவனிக்கவேண்டும் என்பதே. -

மாண்டிலாரி அம்மையார் : மாண்டிஸாரி அம்மையார் இத்தாலி நாட்டைச் சார்ந்தவர் ; கி. பி. 1870 இல் பிறந்தார். உரோம் பல்கலைக் கழகத்தில் எம். டி. பட்டம் பெற்றவுடன் அதே பல்கலைக் கழகத்தில் உளவியற்கலை ஆராய்ச்சித் துறைப்பகுதியில் குறைமதியுள்ள குழந்தைகளைக் கண்காணிக்கும் வாய்ப்பினேப் பெற்ருர். அவ்வாறு பணியாற்றும்பொழுது குறைமதி யுடைமைக்குக் காரணம் புலன்களின் சரியான வளர்ச்சியின்மையே என்பதைக் கண்டார். பொறிகளுக்கு நல்ல பயிற்சி கொடுத்து அக் குழந்தைகளேச் சிறிது அறிவுடையவர்களாகச் செய்ய முடியும் என்பதை அறிந்தார். இவ்வாறு குறைமதியுடைய குழந்தைகளின் கல்வியில் பணியாற்றிய அம்மையார் நாளடைவில் நிறைமதிக் குழந்தைகளின் கல்வியிலும் நாட்டம் செலுத்தினர். பல்லாண்டுகள் இத்துறையில் அரும்பணியாற்றியதன் விளைவாகப் புலன்களின் பயிற்சி வாயிலாகக் குழந்தைகளுக்குக் கற்பிக்கும் புதியதொரு முறையைக் கண்டறிந்தார். அதுவே மாண்டிஸாரி முறை என்பது. அம்மையார் தன் பள்ளியைக் ' குழந்தைகளின் இல்லம் ' என்று பெயரிட்டார். அம்மையாரின் அறிவியற்கலையறிவுதான் இப் புதிய முறையைக் கண்டறியும் வாய்ப்பினே நல்கிற்று என்றுகூடச் சொல்லலாம்.

இம் முறையின் தத்துவம்: மாண்டிஸாரி அம்மையார் ஃபிராபெலப் போலவே குழந்தைகளைச் செடிகளாகக்