உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 149

புலன்களுக்கு நல்ல பயிற்சி அளிக்கவேண்டும் என்பது. அம்மையாரின் கோட்பாடு ; புலன்களே வெளியுலக அறிவினைப் பெறும் வாயில்கள் என்பது அவர் கருத்து. மூன்று வயதிலிருந்து ஏழு வயதுவரை குழந்தைகளுக்கு இப் பயிற்சியை அவசியம் அளிக்கவேண்டும் என்றும், அப்பருவத்தில்தான் குழந்தைகள் அதிகமாகக் கற்கின்றனர் என்றும் அம்மையார் தம் பட்டறிவால் கண்டறிந்துள்ளார். புலன்களின் வளர்ச்சியால்தான் அறிவு வளர்ச்சி எய்த முடியும் என்பது அம்மையாரின் கருத்து.

இம்முறையிலுள்ள பிரிவுகள்: அம்மையார் கண்ட கல்வி முறையில் மூன்று பிரிவுகள் உள்ளன.

முதலாவது : இயக்கக் கல்வி. இதில் குழந்தைகளுக்கு அவரவர் விருப்பப்படி விளையாடுவதற்கு வாய்ப்புக்கள் அளிக்கப்பெறுகின்றன. குழந்தைகள் இல்லத்தின் சூழ்நிலையைக் கவனித்துக்கொள்ளும் பொறுப்பு அவர்களிடமே விடப்பட்டுள்ளது. இயக்கக் கல்வியால் குழந்தைகளிடம் ஒழுங்கு (Discipline) நன்கு அமைகின்றது. நடத்தல், உட்காருதல், பொருள்களைப் பற்றுதல், தம் உடம்பைக் கவனித்துக் கொள்ளுதல், இல்லத்தைக் கவனித்துக் கொள்ளுதல், தோட்டவேலே, தாளத்தை யொட்டிய guáàrìàsir (Rhythmic movements) sobéu.5uāgīāb குழந்தைகள் இயக்கக் கல்வியினேப் பெறுகின்றனர். தம்முடைய ஆடைகளைக் களைந்துகொள்வதிலும் உடுத்திக்கொள்வதிலும் குழந்தைகள் பயிற்சியினைப் பெறுகின்றனர். இதற்காக அம்மையார் தமது அறிவூட்டும் துணைக்கருவியில் பல சட்டங்களை அமைத்து அவற்றில் பல துணித்துண்டுகளையும் தோல்துண்டுகளையும் பொருத்தியுள்ளார். அவற்றிற்குப் பொத்தான்களைப் பொருத்துதல், அவற்றைக் கட்டுதல், மாட்டுதல் முதலியவற்றில் குழந்தைகள் பயிற்சி பெறுவர். உண்கலன்களே ஒலியின்றி எடுத்துப் பயன் படுத்தல், தம் முகங்களேத் தாமே கழுவிக் கொள்ளுதல், நடையன்களைத் (Sandals) தூய்மையாக வைத்துக்கொள்