பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

150 தமிழ் பயிற்றும் முறை

ளுதல், தோட்டவேலை, களிமண் பொம்மைகள் செய்தல் ஆகியவற்றைக் குழந்தைகள் மகிழ்ச்சியுடன் மேற்கொள்ளுகின்றனர். பாட்டுடனும் பாட்டின்றியும் தாளத்திற்கொத்த பயிற்சிகள் தரப்பெறுகின்றன.

இரண்டாவது : புலன்கல்வி. அறிவூட்டும் துணைக்கருவிகளால் இஃது அளிக்கப்பெறுகின்றது. ஐம்புலன்களுக் கும் பயிற்சி அளிக்கக்கூடிய சாதனங்கள் இத் துணைக்கருவி. களில் உள்ளன. இங்கு ஒரே மாதிரியாகவுள்ள பொருள்களை அறிதல், பல்வேறு பொருள்களிலிருந்து அவற்றின் வேறுபாடுகளே அறிந்துகொள்ளுதல், கிட்டத்தட்ட ஒரேமாதிரியாகவுள்ள பொருள்களின் வேற்றுமைகளே துணுகி உணர்தல் ஆகியவற்றில் குழந்தைகள் பயிற்சி பெறுகின்றனர். வட்டம், சதுரம், செவ்வகம், சாய்வு சதுரம் போன்ற உருவங்களையும் பல்வேறு நுண்ணிய வண்ணங்களையும், பல்வேறு நுண்ணிய ஒலிகளையும், வன்மை மென்மைத் தாளங்களையும், நீள அகல உயர வேறுபாடுகளையும், இன்ஞேரன்ன பிறவற்றையும் குழந்தைகள் தாமாகவே நன்கு அறிந்துகொள்ளும் வாய்ப்பினைப் பெறுகின்றனர். மாண்டிஸாரி அம்மையார் ஒரு புலன் பயிற்சியடையும்பொழுது கூடியவரை பிற புலன்கள் வாளாயிருக்கும்படி செய்தல் நலம் என்று கருதுகின்ருர். எடுத்துக்காட்டாக கட்புலனும் செவிப்புலனும் தேவையிராத பொழுது அவற்றை மறைத்துப் பிறவற்றிற்குப் பயிற்சி தருதல் சிறப்பு என்பது: அம்மையாரின் கருத்து.

மூன்ருவது : மொழி கற்றல். கணக்கும் மொழியும் துணைக்கருவிகளாலேயே கற்பிக்கப்பெறுகின்றன. புலன் பயிற்சி முடிவுற்றதும் படித்தல், எழுதுதல், கணக்கு ஆகியவற்றைக் கற்கும் செயல்கள் தொடங்குகின்றன ; அவை புலன் பயிற்சியிலிருந்து நேராக வளர்ச்சியுறுகின்றன. முதலில் அம்மையார் அப் பாடங்களைத் தம் கல்வி முறையில் சேர்க்கவில்லை. பிற்காலத்தில்தான் அவற்றைச் சேர்த்தார். இம்முறையில் எழுதுதல் முதலில் தொடங்கப் பெறுகின்றது.