பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 1 55.

பொறுப்புள்ளது என்ற கொள்கை மிக அண்மையிலேயே கருக்கொண்டு உருப்பெற்றது. இருபதாவது நூற்ருண்டின் முற்பகுதியில்தான். மேற்பார்வைப் படிப்புபற்றிய பல புத்தகங்கள் வெளியாயின ; அறிஞர் பலர் அதுபற்றிய

கட்டுரைகளே எழுதி வெளியிட்டனர். நாளடைவில் அதன் இன்றியமையாமையை எல்லோரும் உணரலாயினர்." அதன் இன்றியமையாமைக்கு நான்கு காரணங்கள்

உள்ளன. அவை :

தேர்ச்சி பெருமை : இன்று கல்வி பன்முக விரிவை: அடைந்துள்ளது ; ஏராளமான மாணுக்கர்கள் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் பயின்று வருகின்றனர். அவர்களுள் தேர்ச்சி பெற்று மேலே செல்லுவோர் மிகச் சிலரே. பெரும்பான்மையோர் தேர்ச்சியுருது போகின்றனர்; பலர் கல்வி நிலையங்களைத் துறந்து தாமாகவே நின்று போகின்றனர். இவ்வாறு தேர்ச்சியுருதிருப்பதற்கும் இடையில் நின்றுபோவதற்கும் மாணுக்கர்களின் மன வளர்ச்சி காரணம் அன்று என்றும், அவர்களிடம் படிக்கும் நற்பழக்கங்கள் சரிவர அமையாமையே அதற்கு முக்கிய காரணமாகும் என்றும் ஆராய்ச்சிகளின் மூலம் கல்வி நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர்.

படிக்க வசதிகளின்மை : நம் நாடு வறுமையில் ஆழ்ந்துள்ளது. பெரும்பான்மையான மாணு க்கர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். நாட்டுப்புறங்களிலிருப்பினும் நகர்ப்புறங்களிலிருப்பினும், அவர்கள் வீட்டில் படிக்கும் சூழ்நிலையும் இல்லே : படிக்கும் வசதிகளும் இல்லை. நல்ல. காற்ருேட்டமும் வெளிச்சமும் உள்ள தனி அறைகள் அவர்களுக்கில்லை. பெற்றேர்களும் உடன்பிறந்தோர்களும் பிறரும் சூழ வீட்டு அலுவல்களுக்கிடையில் அவர்கள் எங்ங்னம் படிப்பில் கவனம் செலுத்தமுடியும் ? அப்படிப் படித்தாலும்

  • இன்று கல்வி இயக்குநராகப் பணியாற்றும் நெ. து. சுந்தரவடிவேலு அவர்கள் இதனை அதிக அக்கறையுடன் போற்றி வருவது மிகவும் பாராட்டத்தக்கது.