பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/18

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


நூல் முகம்

நாடிப் புலங்கள் உழுவார் கரமும் நயவுரைகள் தேடிக் கொழிக்கும் கவிவாணர் நாவும் செழுங்கருணை ஒடிப் பெருகும் அறிவாளர் நெஞ்சும் உவந்து நடம் ஆடிக் களிக்கும் மயிலே ! உன் பாதம் அடைக்கலமே."

--தேசிக விநாயகம் பிள்ளை

தாய் மொழியின் இன்றியமையாமையை எல்லாத் துறைகளிலுள்ளவர்களும் உணர்ந்து வருகின்றனர். மக்களாட்சியில் தாய் மொழி பெரும்பங்கு கிொள்ளவேண்டிய சிறந்ததொரு கருவியாகும். கோளுட்சியின் நோக்கம் வேறு; குடியாட்சியின் நோக்கம் வேறு. கோளுட்சியில் ஆள்வோர் தம் ஆணையைக் குடிமக்களிடம் அடையச் செய்வது; குடியாட்சியில் மக்கள் தம் விருப்பத்தை ஆள்வோர் அறியச் செய்வது. இதற்கு மக்கள் அறிந்த மொழிதான் தக்கதொரு கருவியாக இருக்க முடியும். எனவே, அனைவரும் தாய் மொழியில் தெளிவாகப் பேசவும் எழுதவும் ஆற்றல் பெற. வேண்டும் என்பதைக் கூறவா வேண்டும் ? இதை முக்கிய நோக்கமாகக்கொண்டு தொடக்க, இடை, உயர்நிலைப். பள்ளிகளில் பணியாற்றும் தாய்மொழி ஆசிரியர்கள் மொழியைக் கற்பிக்கவேண்டும் ; தாய் மொழியிலேயே எல்லாப் பாடங்களும் கற்பிக்கப்பெறவேண்டியதாயிருத்தலின் பிற. பாட ஆசிரியர்களும் இந் நோக்கத்தை நினைவில் வைத்துக்கொண்டு பணியாற்றவேண்டும்.

இப் புத்தகம் தமிழ் பயிற்றும் முறை”யைக் கூறுவது. உளவியல் உண்மைகளே அடிப்படையாகக்கொண்டு மேற்புல அறிஞர்கள் எத்தனையோ பயிற்று முறைகளைக் கண்டறிந்துள்ளனர். அவற்றையெல்லாம் மொழியின் மரபு கெடாது எந்தெந்த அளவில் நந்தமிழ் மொழியைக் கற்பிப்பதில் ம்ேற்கொள்ளலாம் என்பதை ஓரளவு ஆராய்ந்துள்ளேன். பொதுவாக எல்லா ஆசிரியர்களும், சிறப்பாகத் ____________________________________________________

  • மலரும் மாலையும்.

ح,