பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 167

தற்கும், பயனற்ற முறைகளைக் கையாளுவதற்கும், தட்டுத். தடுமாறிக் காலத்தை வீணுக்குவதற்கும் காரணமாகின்றது. சில குடும்பங்களில் படிக்காத, படித்தும் பயிற்சி பெருத, பெற்றேர்கள் அல்லது நண்பர்கள் மாணுக்கர்களுக்குத் துணை செய்ய முன்வந்து அவர்களைக்கெடுத்து விடுகின்றனர்; சில பெற்ருேர்கள் முழுவேலையையும் தாமே செய்து கொடுத்துக் கெடுத்துவிடுவதையும், சில குடும்பங்களில் ஒரு சாலை மாணுக்கர்கள் சேர்ந்து கற்று ஒருவரை யொருவர் கெடுத்துக்கொள்வதையும் காண்கின்ருேம். இக் கூட்டுப் படிப்பில் அரைச் சோம்பேறிகளாக இருப்பவர்கள் முழுச் சோம்பேறிகளாவதும் உண்டு. இக் குறைகளை யெல்லாம் களைந்து மாணுக்கர்களிடையே நல்ல படிப்புப் பழக்கங்களே உண்டாக்குவதற்கு மேற்பார்வைப் படிப்பு என்ற ஒரு முறை. இன்றியமையாததாகின்றது. அன்றியும், ஒரே வயதுடைய ஒரு வகுப்பிலுள்ள பலபடித்திறன்கள்ேயுடைய மாளுக்கர்களேத் தனித் தனியாகக் கவனிக்கவும், இம் முறை தேவையாக உள்ளது. சரியான படிப்புமுறை இல்லாத காரணத்தால்: சில அறிவுள்ள மாளுக்கர்களும் பிற்போக்குள்ளவர்களாவதைத் தடுத்து நிற்கவும் இம்முறை பயன்படுகிறது. மேற்பார்வைப் படிப்புபற்றி நடத்தப்பெற்ற ஆராய்ச்சிகளின் புள்ளி விவரங்களால் இடை, கடை மாணுக்கர்கட்கு மிக்க நன்மை விளைந்திருப்பதையும், பெரும்பாலோர் தாமே வீட்டில் படிப்பதைவிட இம்முறையில் சிறந்த முறையில் அதிக அளவு வேலை செய்கின்றனர் என்பதையும் அறிகின்ருேம்.

இம்முறையை மேற்கொள்ளும் விதம் : பள்ளி நடை முறையில் மேற்பார்வைப் படிப்பு பலவிதமாகக் கையாளப் பெறுகின்றது. ஒவ்வொன்றிலும் நிறைகள் இல்லாமல் இல்லை. அவ்வாறு மேற்கொள்ளப்பெறும் வழிகளில் ஒரு சிலவற்றை ஈண்டு குறிப்பிடுவோம். பள்ளி ஆட்சிமுறை எப்படியிருப்பினும் தாய்மொழி யாசிரியர்கள் தம் பாட வேளேகளில் இம் முறையை எவ்வாறு மேற்கொள்ளலாம் என்பதை அறிவதற்கு இவை ஓரளவு துணைபுரியக்கூடும்.