பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/181

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

超58 தமிழ் பயிற்றும் முறை

இரண்டு பாடவேளைத் திட்டம் : பாடவேளைப்பட்டியில்இரண்டு பாடவேளைகளைத் தொடர்ந்தாற்போல் அமைத்து அந்நேரத்தில் இம் மேற்பார்வைப் படிப்பினை மேற்கொள்ள. லாம். அந் நேரத்தில் மாணுக்கர் முதற்பாதியைப் பாட்டு ஒப்புவித்தலுக்கும், வேறு வகுப்புவேலைகளுக்கும் பயன்படுத்திப் பிற்பாதியை அடுத்த பாடத்தின் முன்ஆயத்தத்திற்குப் பயன்படுத்தலாம். அந் நேரத்தில் மாணுக்கர்கள் படிப்பதில் ஆசிரியர் தேவையுள்ளவர்கட்கு வழிகாட்டுவார். இத் திட்டத்தை மேற்கொண்டால் பள்ளி நேரம் அதிகமாதல், பள்ளி நடைமுறைக்குச் சிறிது இடையூறு உண்டாதல், மானுக்கர் படிக்கும் பகுதியைக் குறைத்தல் போன்ற குறைகள் நேரிடலாம் என்று முறை வல்லார் கருதுகின்றனர். ஒருநாளில் இறுதி இரண்டு பாடவே&ளகளே இதற்கு ஒதுக்கப்பட்டால் பயன் உண்டு.

ஒரு பாடவேளைத் திட்டம் : முன் திட்டத்தைவிட இது சிறப்புடையது. ஏனெனில், இதல்ை பள்ளி நடைமுறைக்கு யாதோர் இடையூறும் இல்லை. முன் திட்டத்தைப் போலவே, பாடவேளையின் பிற்பகுதியில் இதை நுழைக்கலாம். இதில் காலம் கழிவது தெரியாது ; விரைந்து செல்லும் ஆசிரியரின் வகுப்பு வேலைக்கும், மாணுக்கர் தாமே படிக்கும் வேலைக்கும் நேரம் போதாதபடி இருக்கும். பாடவேளையில் பாதிநேரம் கழிந்ததும் ஒரு மணி ஓசையினுல் மேற்பார்வைப் படிப்பைத் தொடங்கும் காலத்தை அறிவிக்கலாம் ; அல்லது, பாதி நேரம் கழிந்ததும் மேற்பார்வைப் படிப்பைத் தொடங்கும் பொறுப்பை மொழி ஆசிரியரிடமே விட்டு விடலாம்.

தனிப் பாடவேளைத்திட்டம் : ஒவ்வொரு நாளிலும் பள்ளிவேலே முடிந்ததும் ஒரு பாடவேளே யை மேற்பார்வைப் படிப்புக்கென ஒதுக்கி இதை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலும் பிற்போக்குள்ள மாணுக்கர்களுக்காகவே இவ் வேலையை மேற்கொள்ளவேண்டும். மானுக்கர்களின் ஐயங்களே அறியவும், சரியான முறைகளில் படிப்பை மேற்கொள்ளும் வழிவகைகளைக் காட்டவும், புதிய