பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள்-(2) 1 5 9.

பாடத்தைப் படிக்கும் சரியான வழியைக் காட்டவும் இந்நேரம் பயன் படுத்தப்பெறும். எல்லா மாணுக்கர்களையும் இருக்கும்படி செய்தும் தேவை யில்லாதவர்களே அனுப்பிவிட்டும் இதை மேற்கொள்ளுகின்றனர். இது தவறு. எல்லோரும் இந்நேரத்தில் இருந்து படிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லாவிட்டால், படிப்புத் தேவையுள்ளவர்களும் போய்விடக்கூடும் ; தேவையில்லாதவர்கள் இருந்து படித்துப் பெரும்பயன் அடையவும் கூடும். இதனுல் பிற்போக்கு மாணுக்கர்களுக்குப் பயன் இல்லாது போய்விடும். சில பள்ளிகளில் இன்னுர்தான் இருந்து படிக்க வேண்டும் என்று அறிவித்து இப் படிப்பினை மேற்கொள்ளுகின்றனர். இத் திட்டத்திகுல் ஆசிரியருக்கு அதிக வேலை ஏற்படுவதுடன் அவர் பள்ளியில் அதிக நேரம் தங்கும்படியும் நேரிடுகின்றது. w

இவற்றைத் தவிர வேறு பல திட்டங்கள் கால்வின், பாஸிங் போன்ற ஆசிரியர்களின் நூல்களில் கண்டு கொள்க.

இப் படிப்பு நேரத்தில் ஆசிரியரின் பங்கு : மாணுக்கர்கட்கு எப்படி ஒரு பகுதியைப் படிக்கவேண்டும் என்று சரியான முறைகளைக் காட்டலாம். மாணுக்கர்களின் தனித்தனி ஆற்றல்களைக் கண்டறிந்து அவரவர்களுக்கு வேண்டிய உதவிகளைத் தரலாம். புதுப்பாடத்தில் சிறந்த ஒரு பகுதியை ஒப்படைப்புக்களாகக் கொடுத்துப் படிக்கச் செய்யலாம். வகுப்பில் நடந்த ஒரு பாடத்தின் சுருக்கத்தை எழுதும்படி துண்டலாம். எந்தப் புத்தகத்தைப் படித்தாலும் படிக்கத் தொடங்குவதற்குமுன் அப் புத்தகம் அச்சிட்ட ஆண்டைக் கவனித்தல், முன்னுரையைப் படித்தல், உள்ளுறையைப் படித்தல், அந்நூல் எழுதுவதற்கு ஆசிரியர் மேற்கொண்ட நூல்களே அறிதல், ஆசிரியன் நோக்கத்திற்கேற்றவாறு படித்தல், குறிப்புப் பொருளகராதி மூலம் வேண்டிய பொருளே அடையும் முறை ஆகிய ஆறு கூறுகளையும் தெரிந்துகொண்டுதான் படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதை மாணுக்கர்களுக்கு உணர்த்தலாம். இவற்றைத்