பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (2) 163

வற்றை மனத்திற்கொண்டு அவற்றிற்கேற்றவாறு பல படி களில் ஆயத்தம் செய்யவேண்டும்.

தமிழ் கற்பித்தலில் இம் முறை : கவிதை, உரைநடை, இலக்கணம் ஆகிய பாடங்களில் இம்முறையினே நன்கு கையாளலாம். படிக்கவேண்டிய அனைத்தையும் இம் முறையினலேயே கற்கவேண்டும் என்று நினைத்தல் தவறு; தாம்கூறும் வேலையை ஆசிரியர் குறைத்துக்கொண்டு மாணுக்கர் கண்டறிந்து சொல்லும் வாய்ப்பினே அதி கரித்தல்தான் இம்முறையின் உயிர்நாடியாகும். பாடத்தில் படிப்படியாகச் செல்லும்பொழுது சிந்தனையைக் கிளறும் வினுக்களே விடுத்துக்க்கொண்டே, கற்பிக்கவேண்டியவற் றிற்குரிய பல செய்திகளை இடங்களேயொட்டி மாணுக்கர்க ளிடமிருந்தே வருவிக்கலாம். எடுத்துக்காட்டாக, இலக் கணப் பாடத்தில் சில உதாரணங்கள் கூறி விதியை வருவிக் கலாம். ஆகுபெயர் பாடம் நடத்தினுல், ஆகுபெயர் வகை களைப் பிரித்தறியவும், அவற்றிற்குப் புதிய எடுத்துக்காட்டுக் களைத் தரவும் பயிற்சிகளைக் கொடுக்கலாம். மேல் வகுப்பாக இருந்தால் கம்பராமாயணத்தில் குகப்படலம் நடக்கும் பொழுது கங்கை வேடனேப்பற்றிய செய்திகளையும் அவன் இராமனிடம் கொண்டிருந்த அன்பின் கணிவையும் எடுத்துக் கூறி, அதைப் போலவே பெரிய புராணத்தில் வரும் காளத்தி வேடனின் குணங்களேயும் அன்பின் பெருமையையும் அறிந்து வரும்படி மாணுக்கர்களே ஏவலாம். இலக்கணப் பாடத்தில் விதி வருவித்தல் முறையினைக் கையாளும் பொழுது புதிய விதிகளைக் காணுவதிலும், விதிவிளக்கு முறையினை மேற்கொள்ளும்பொழுது விதிக்குப் புதிய எடுத்துக்காட்டுக்களேக் காணுவதிலும் இம் முறை பெரிதும் பயன்படும். இம் முறையினுல் மானுக்கரிடையே ஆராய்ச்சி மனப்பான்மையை வளர்த்தல்தான் முக்கியம் என்பதை ஆசிரியர் நோக்கமாகக் கொண்டால் போதுமானது.

இம் முறையின் கிறைகள் : இம் முறையை மேற்கொள்வ தால், மாணுக்கர்களிடம் உற்று நோக்குந்திறன், ஆய்வுப்