பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்று முறைகள் (2) 165

தொன்று. ஆசிரியர் சில தகவல்களைச் சொல்லவேண்டியும் நேரிடும். இம் முறைக்கேற்றவாறு பாடப் புத்தகங்கள் இல்லாததால், ஆசிரியருக்கு அதிக வேலை உண்டாகின்றது; அதைச் செய்வதும் அரிதாக உள்ளது. அன்றியும், எல்லா ஆசிரியருக்கும் இம் முறை பொருந்தாது ; இம் முறை வேண்டும் அரிய பண்புகளனைத்தும் எல்லா ஆசிரியர் களிடமும் உள்ளன என்று நம்ப முடியாது. இதனே மேற் கொள்ளும் ஒரு சிலரும் இம்முறையைச் சரியாகக் கையாளும் வழியினே அறியார். சிலர் அரிய செய்திகளை மாணுக்கர்க வரிடம் எதிர்பார்ப்பர் ; சிலர் மிகக் குறைந்தவற்றை எதிர் பார்ப்பர். இரண்டும் சரியன்று. பெரிதும் பட்டறிவும் கூர்த்த மதியும் உடையவர்களே இம்முறையை மேற் கொள்ளலாம். கண்டறியும் மனப்பான்மைதான் இம் முறையின் முக்கிய நோக்கம் என்பதைச் சாதாரண ஆசிரியர் களால் புரிந்துகொள்ளவும் இயலாது. மானுக்கர்களுக்குக் கற்பிக்கவேண்டிய பாடங்களைப் படிப்படியாக அமைத்துக் கற்பித்தல் எல்லோராலும் இயலாது; அன்றியும், எல்லாச் செய்திகளும் மாணுக்கர்களின் பட்டறிவை யொட்டியும் இரா. கீழ் வகுப்புக்களில் இம்முறையினைக் கையாள முடியாது. பாடத்திட்டத்தையும் தேர்வு முறைகளையும் மாற்றியமைக்காத வரையில் இம் முறையினை நல்ல போக் கில் மேற்கொள்ளவே இயலாது.

எந்த முறையினை மேற்கொண்டாலும் கண்டறியும் மனப்பான்மையை மாணுக்கர்களிடம் வளர்த்தால் போது மானது. அதுவே இம்முறையின் நோக்கம். அம் மனப் பான்மையுடனுள்ள மாணுக்கர்கள்தாம் சிறந்த குடிமக்க ளாகத் திகழமுடியும்.

இவண் குறிப்பிட்ட ஐந்து முறைகளிலும் மாளுக்கர்கள்

தனித்தனியாக இருந்து கற்கின்றனர் என்பது உளங் கொள்ளத் தக்கது.