பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. பயிற்றலின் உபாயங்கள்

இதுகாறும் கற்பித்தலில் ஆசிரியர் கையாளும் சில முற்ைக்ளேக் கண்டோம். இனி, அத்துறையில் கையாள வேண்டிய ஒரு சில உபாயங்களைப்பற்றி (Devices) ஆராய் வோம். பெரும்பாலும் அவ் வுபாயங்கள் கற்கும் மாணுக்கர்களின் கவனத்தை ஈர்க்கவும், புலன்களின் வாயிலாக அவர்கட்குப் பல கருத்துக்களைப் புகட்டிக் கற்கும் பாடங்களில் அழுத்தமான அறிவைப் பெறச் செய்யவும் பயன்படுகின்றன ; உடலும் மனமும் ஒத்தியங்கிக் கற்கத் துணைபுரிகின்றன. வினுக்கள், விளக்கம் தருதல், துணைக்கருவிகள், மாணுக்கர்கட்குத் தரப்பெறும் வீட்டு-வேலை ஆகிய உபாயங்கள் பெரிதும் பயன்படக்கூடியவை. இவை ஒவ்வொன்றையும் பற்றி ஈண்டு ஒரு சிறிது காண்போம்.

1. வாய்மொழி விளுக்கள்

கற்பித்தலில் வாய்மொழி வினுக்கள் பல்வேறு விதமாகப் பயன்படுகின்றன. விளுக்களைத் தக்க முறையில் கையாளுதலில் இளம் ஆசிரியர்கள் நல்ல பயிற்சியைப் பெறவேண்டும். இந்த உபாயத்தால்தான் மாணுக்கர்களும் ஆசிரியர்களும் மனநிலையில் ஒன்ருகப் பிணைக்கப்படுகின்றனர். வினுக்களை விடுக்கும் திறன் கைவரப்பெற்ற ஆசிரியர்கள் ஒரளவு கற்பிப்பதில் வல்லுநராக இருப்பர் என்று கூறலாம் ; ஆல்ை, வினுக்களைத் தக்க முறையில் விடுக்கத் தெரியாதவர் சிறந்த ஆசிரியராகத் திகழமுடியாது என்று துணிந்து கூறிவிடலாம். வினவுதல் கற்பித்தலில் கைவரப்பெற வேண்டிய ஒரு முக்கிய திறனுகும். வினவு தலைக் குறித்து கிப்லிங் என்ற கவிஞர்,