உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 169

கள் மாணுக்கர்களைப் படிப்படியாகப் புதிய பொருள்களே அறியத் துணேசெய்பவை. பாடத்தின் ஒவ்வொரு படியின் இறுதியிலும் பாடமுடிவிலும் விடுக்கப்பெறும் வினுக்கள் கற்பித்த பாடத்தை மாணுக்கர் எந்த அளவில் புரிந்து கொண்டுள்ளனர் என்பதையும், எவற்றில் ஐயப்பாடுகள் உள்ளன ? எவற்றைத் திரியாக உணர்ந்தனர் ? எவற்றைத் தவருக உணர்ந்தனர் ? என்பனவற்றை அறியவும், எப் பகுதிகளை இன்னும் நன்கு விளக்க வேண்டும்? என்பதைத் தெரிந்து கொள்ளவும் பயன்படுபவை. இம் மூன்றுவகை வினுக்களையும் ஒரு சிறிது தனித்தனியாக ஆராய்வோம்.

முதலாவது புகுமுக-விளுக்கள் : ஒவ்வொரு பாடத்தின் தொடக்கத்திலும் ஆசிரியர் மாணுக்கர்களின் முன்னறி வினைச் சோதித்து அறியவேண்டும். முன்னறிவினை அறிந்தால்தான் புதிதாகக் கற்பிக்கப்பெறும் பொருள்களை அத்துடன் இணைக்க முடியும் ; பொருந்தவைக்க முடியும். இதைத்தான் ஹெர்பார்ட் என்ற அறிஞர் வற்புறுத்தினர். அவர் கூறிய ஐந்துபடிகளில் மனத்தைத் தயாரித்தல் ’ என்பதுதான் முன்னறிவுச் சோதனை என்பது. பெரும்பாலும் இந் நிலை, மானுக்கர்களைப் பொறுத்துள்ளது. எனவே, ஆசிரியர் மாணுக்கர்களின் மனத்தைப் பல பொருள் களில் அலேயவிடாது மிக்க விழிப்புடன் தான் கற்பிக்க விரும்பும் புதிய பொருளின்பால் இழுத்துச் செல்லவேண்டும். இதற்கு ஆசிரியர் மிகச் சிந்தித்து விளுக்களை ஆயத்தம் செய்ய வேண்டும். வினுக்களைச் சரியாக ஆயத்தம் செய்யாவிடில், அவ் விளுக்களால் நற்பயன் விளையாது. ஆசிரியர் விரும்பியபடி மாணுக்கர்களின் முழுக் கவனத்தையும் ஒரு புதிய பொருளில் ஈடுபடுத்துவதற்குப் பதிலாக, அவ் விளுக்கள் வகுப்பு மாணுக்கர்களைப் பல பொருள்களுக்கு இழுத்துச் சென்று அவர்களுடைய மன நிலையைக் கலத்துச் சிதற அடித்து விடும். எனவே, ஆசிரியர்கள் இந்நிலையில் விடுக்கும் வினுக்களை மிகவும் நன்ருகச் சிந்தித்து ஆயத்தம் செய்யவேண்டும். .