பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17 O தமிழ் பயிற்றும் முறை

இரண்டாவது-பாடவளர்ச்சி விளுக்கள் : பாடவளர்ச்சியின்பொழுது வினுக்களின் பயனே நன்கு அறியலாம். அதுவும் படிப்படியாக வளர்ந்து சிந்திக்கும் ஆற்றலை ஊக்குவிக்கும் பாடமாக இருந்தால், விளுக்களின் இன்றியமையாமையை நன்கு அறிய முடியும். எடுத்துக்காட்டாக, ஆசிரியர் ஒரு புதிய இலக்கண விதியைக் கற்பிக்க முயலுங்கால் இவ்வினுக்களின் பயனேத் தெளிவாக உணர முடியும். விதிவருவித்தல் முறையாயினும் விதிவிளக்கு முறையாயினும் வினுக்களின்றிப் பாடத்தைப் பயனுள்ள முறையில் கொண்டுசெலுத்த இயலாது. ஆசிரியர் திறமை யாகக் கையாளும் தேர்ந்தெடுத்த வினுக்களேக் கொண்டு. தான் மாணுக்கர்கள் உற்சாகமாகப் பாடத்துடன் கலந்துகொண்டு, கற்று, புதிய உண்மைகளேக் காணுகின்றனரா அன்றி உயிர்ச்சிலேகள் போலிருந்துகொண்டு ஆசிரியரின் திறமையை வியந்து கொள்கின்றனரா என்பதை அறுதியிட முடியும், வகுப்பறை சாலவித்தையாடும் களம் அன்று. மாணுக்கர் புதிய உண்மைகளைக் கற்க வந்துள்ளனரே யன்றி ஆசிரியரின் திறமையை வியந்து மருள வரவில்லை என்பதை ஆசிரியர் உணரவேண்டும். மொழிப் பாடத்தில் எல்லாப் பகுதிகளையும் விளுக்களைக் கொண்டே கற்பிக்க இயலாது. இலக்கணத்தில் சில பகுதிகளே இவ்வாறு கற்பிக்கலாம். ஏனேய பகுதிகளைக் கற்பிக்கும்பொழுதும் கவிதை உரைநடை ஆகியவற்றைக் கற்பிக்கும்பொழுதும், வினுக்களே அதிகமாகக் கையாள முடியாது. வரலாறு, வருணனைபற்றிய பாடல்களேக் கற்பிக்கும்பொழுது ஆசிரியரே பெரும்பகுதியைத் தம் சொற்களால் அழகுற எடுத்துக் கூறவேண்டியிருக்கும். பட்டறிவில்லாத ஒரு சில ஆசிரியர்கள் இம்மாதிரியான பகுதிகளைக் கற்பிக்கும்பொழுதும் மாணுக்கர்களிடமிருந்து செய்திகளை வருவிக்க எண்ணியும் கடாமாட்டில் பால் கறப்பதை யொத்த முயற்சியினை எடுத்துக் காலத்தைக் கொன்னே கழிப்பர். புதிதாகக் கற்கும் நிலையிலுள்ள மாளுக்கர்களின் அடிமனத்திலிருந்து அனேத்தையுமே வருவித்தல் கூடுமென்று எண்ணுதலும் தவறு ; அந்த அடிமனத்திற்குப் புதிய செய்திகளைத் தரு