பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 17 f

வதிலும் ஆசிரியரின் துணை தேவை என்பதை அவர் உணர்ந்து கற்பித்தல் வேண்டும். பட்டறிவில்லாத ஆசிரியர்கள் வினுக்களால்மட்டிலும் கற்றல் நடைபெற வேண்டுமென்று எண்ணி எடுத்ததெற்கெல்லாம் வினுக்களைக் கையாளுவர்.

மூன்ருவது - தொகுத்துரை வினுக்கள் : ஒவ்வொரு பாடத்திலும் பல படிகள் இருக்கும் ; ஒவ்வொரு படியின் இறுதியிலும் பாட முடிவிலும், ஆசிரியர் சில விகுக்களே விடுத்து மாணுக்கர் பயின்றவற்றைத் திட்டமாக அறிந்து கொள்ளவேண்டும். இந் நிலையில் மாளுக்கர் பயின்றவற்றைத் திரும்பக்கூறும் திறனைப் பெற்றிருப்பதுடன் அவற்றைக் காரண காரிய முறைப்படியும் கூறவேண்டும். ஆழ்ந்து சிந்தித்துத் தேர்ந்தெடுத்த விளுக்களைக்கொண்டுதான் இதனை நிறைவேற்ற முடியும். ஏதோ மனத்தில் தோன்றிய விளுக்களை விடுத்தால் மாணுக்கர் கூறும் விடைகள் ஒன்ருெடொன்று பொருந்தாதவைகளாக இருக்கும். விரைவாகப் போகும் சிறு சிறு விளுக்கள் இந் நிலையில் பெரும் பயனை விளைக்கா. அவை பெரும்பாலும் மானுக்கரின் மனத்தை முற்போக்கில் கொண்டுசெலுத்துவதைவிடப் பிற்போக்கில்தான் அதிகமாகக் கொண்டுசெலுத் தும் ; விளக்கம் தருவதைவிடக் குழப்பத்தைத் தான் உண் டாக்கும். இந் நிலையில் ஒரு சில வினுக்களுக்குமேல் அதிக மாகக்கையாளக்கூடாது. ஒருசிலர் அவற்றிற்கு விடையிறுக் கும்பொழுது அவ்விடையில் தொடர்பற்ற நிலையைக் கண் ணுற்ருல் ஆசிரியர் ஒன்றிரண்டு சிறுவினுக்களை விடுத்து வேறு சில மாணுக்கர்களைக்கொண்டு விடையில் தொடர்பை ஏற்படுத்திவிடலாம். பாடத்தைத் திரும்பக்கூறும் வேலை மாணுக்கருடையதாக இருக்கவேண்டுமேயன்றி ஆசிரியருடையதாக இருத்தல் கூடாது. பெரும்பாலும் மேல்வகுப்பு மாணுக்கர்களிடையேதான் இம்முறையை வெற்றி யுடன் கையாள முடியும் ; கீழ் வகுப்பு மாணுக்கர்களிடமும் . ஒருசில சொற்ருெடர்களால் விடையிறுக்கும் பழக்கத்தை வளர்க்கவேண்டும். பழக்கத்தை உண்டாக்குவதில் ஆசிரி