பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 翌75

கவனக் குறைவாக இருக்கும் மாணுக்கர்களை நோக்கி ஒரு சில விளுக்களை விடுத்தால், அவர்கள் கவனிப்பதுடன் பிறரும் கவனக் குறைவாக இருப்பதற்குத் தூண்டப்பெருர். ஒரே மாதிரியாக விளுக்களை விடுப்பதைவிட அவற்றைப் பல வடிவங்களில் அமைத்துக் கையாண்டால் மாணுக்கரின் சிந்தனை யாற்றல் நன்கு வளரும்.

மாணுக்கர் தரும் விடைகளையும் ஆசிரியர் பாராட்டவேண்டும். அறிவுத் திறனுடன் தரப்பெறும் விடைகளே மெச்சவேண்டும். யாராவது ஒருவர் தெளிவற்ற விடையிறுத்தால் அதை அடிப்படையாக வைத்துக்கொண்டு சரியான விடைக்கு அழைத்துப் போகவேண்டும். அதைப் பல சிறுவினுக்களால் நிறைவேற்றலாம். ஒருவரோ அல்லது பலரோ சரியான விடை தருவதில் பங்கு கொள்ளலாம். . தவருக விடையிறுக்கப்படும்பொழுது ஆசிரியர் அத் தவற்றினே எல்லோரும் அறியச் செய்யவேண்டும். சில சமயம் தவருன விடையிலிருந்தும் சரியான விடைக்குச் செல்லக்கூடும் ; சில சிறு வினுக்களைக் கொண்டு மாணுக்கர்களைச் சிந்திக்கச் செய்து அத் தவற்றின விளக்கிச் சரியான விடையிறுக்கும்படி செய்யலாம். சில சமயம் பலர் சேர்ந்து ஒரே குரலில் விடையிறுப்பர் ; அப் பழக்கத்தை ஆசிரியர் தொடக்கத்திலேயே களையவேண்டும். முழு வாக்கியங்களில் விடையிறுக்கப் பெற வேண்டுமா என்பதைப்பற்றிக் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அவ்வாறு விடையிறுப்பது பாடங்களின் நோக்கத்தைப் பொறுத்தது. பெரும்பாலும் உரையாடலில் வரும் விடைகளேப் போலிருந்தால் போதுமானது. ஆணுல், ஆசிரியர் நல்ல மொழிப் பழக்கத்தை எய்துவிக்க எண்ணும்பொழுது முழு வாக்கியங்களில் விடையிறுக்கும்படி வற்புறுத்தலாம். எடுத்துக்காட்டாக, ' கம்பன் பிறந்த ஊர் எது?’ என்ற விவிைற்கு தேரழுந்துர் 1’ என்ற விடை போதுமானது : கம்பன் பிறந்த ஊர் தேரழுந்துார் !’ என்று சொல்லுமாறு வற்புறுத்துவதால் பயன் ஒன்றும் இராது.