பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

盘78 தமிழ் பயிற்றும் முறை

நிலவியல் ஆகியவற்றைக் கற்பிக்கும்பொழுது விளக்கம் தருதல் பெரிதும் பயன்படும். பயிற்சி பெருத ஆசிரியர்களும், பயிற்சி பெற்றுப் பட்டறிவு கைவரப்பெருத ஆசிரியர்களும் இத்தவறுகளைச் செய்கின்றனர்; விளுக்களைக் கையாளவேண்டிய இடங்களில் விளக்கந் தருதலையும் விளக்கந்தருதல் இடம்பெறவேண்டிய இடங்களில் விளுக்களையும் கையாளுகின்றனர். புதிதாகக் கற்பிக்கப்பெற வேண்டிய பாடங்கள் திரும்பப் பெறும் பயிற்சிகள் போல் நடை பெறுகின்றன. எல்லோராலும் சிறப்பான முறையில் விளக்கந்தருதலேக் கையாள முடியாது என்பது உண்மை தான். என்ருலும், மனம் இருந்தால் வழி பிறக்கும். தக்க அக்கறை எடுத்துத் தேவையான பயிற்சிகளேப் பெற்ருல் கட்டாயம் அத்துறையில் வெற்றியடையலாம் ; அடையவும் முடியும்.

விளக்கந்தருதலைக் கையாளுவது எங்ங்ணம் என்பதை ஒர் எடுத்துக்காட்டால் விளக்குவோம். * முன்றின் முஞ்ஞையொடு ' என்று தொடங்கும் புறப்பாட்டில் வரும் காட்சியை உணர்த்தும்பொழுது விளக்கந்தருதல் நன்கு பயன்படும். அப்பர்டல் வருமாறு:

முன்றின் முஞ்ஞையொடு முசுண்டை பம்பிப் பந்தர் வேண்டாப் பலாத்துங்கு நீழல் கைம்மான் வேட்டுவன் கனதுயின் மடிந்தெனப் பார்வை மடப்பிணை தழி இப் பிறிதோர் தீர்தொழில் தனிக்கலே திளைத்துவிளை யாட இன்புறு புனர்நிலை கண்ட மனையோள் கணவன் எழுதலும் அஞ்சிக் கலையே பிணைவயின் தீர்தலும் அஞ்சி யாவதும் இல்வழங் காமையிற் கல்லென ஒலித்து மானதட் பெய்த உணங்குதினை வல்சி

கானக் கோழியொடு இதல்கவர்ந்(து) உண்டென ஆர நெருப்பில் ஆறல் நாறத் தடிவார்ந் திட்ட முழுவள் ளுரம் இரும்பேர் ஒக்கலொ(டு) ஒருங்கினி(து) அருந்தித்