பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 தமிழ் பயிற்றும் முறை

முதல்நாளிரவு அவனுக்குத் தூக்கமே இல்லை; அயர்ச்சியும் அதிகமாக இருந்தது. எனவே, பகல் நேரத்தில் அவ்' இட்டுவன் குறட்டைவிட்டு மிக நன்ருகத் துாங்கு கின்ருன்.

அந் நேரத்தில் வீட்டிற்கு முன்புறம் சிறிது தூரத்திற்கு அப்பால் பார்வைமான் ஒன்று கட்டப்பெற்றிருக்கின்றது. பார்வைமான் என்பது பிற மான்களைப் பிடிப்பதற். காகவே பயிற்சி கொடுத்து வீட்டில் வளர்க்கப் பெறும் பெண்மானுகும். அது மிகவும் நன்ருகக் கொழுத்து வளர்ந்து பார்வைக்கு மிக அழகாக இருக்கின்றது. காட்டில் விருப்பப்படித் திரியும் பெண்மாளுக இருந்தால் அஃது இக்கடிப் பிற ஆண்மான்களைச் சந்தித்து அவற்றுடன் புணர்ந்து இன்பம் அனுபவிக்கும் வாய்ப்புக்களைப் பெறும். ஆல்ை, வீட்டிலேயே கட்டப்பட்டுக் கிடக்கும் பெண் மானுக்கு அத்தகைய வாய்ப்புக்கள் கிட்டுவது அரிதாகும். ஒன்றிரண்டு தடவை அங்ங்னம் வாய்ப்புக்கள் கிட்டிலுைம் அப்பொழுதெல்லாம் அவற்றிற்கு இடையூருகப் பல நிகழ்ச்சிகள் குறுக்கே நின்று அவ்வின்பம் இடையறவுபட்டு விடும்; அது கிடைக்காது போவதும் உண்டு.

வேட்டுவன் உறங்கிக்கொண்டிருக்கும்பொழுது ஆள் அரவம் இல்லாத அந்நேரத்தில் காட்டில் திரியும் ஆண் மான் ஒன்று அப் பெண்மானிடம் வந்து கூடி விளையாடிக்கொண்டிருக்கின்றது. கிடைத்தற்கரிய அக்காதல் இன்பத்தைத் தனது பார்வை மடப்பினே அனுபவிப்பதை வீட்டின் வாயிற்படியில் நின்றுகொண்டிருக்கும் வேட்டுவச்சி காண்கின்ருள். அதே நேரத்தில் வீட்டின் முற்றத்ல் மான்தோலின்மீது உலரவைக்கப் பெற்றிருக்கும் தின அரிசியைக் கானக் கோழிகளும் இதல்’ என்ற ஒருவகை மஜலவாழ் பறவைகளும் கொத்திக்கொத்தி விழுங்கிக்கொண்டிருக்கின்றன. சிரமப்பட்டுச் சேமித்த அரிசி அது; வீட்டில் அன்றைய இரவு உணவுக்கு அதை தவிர வேறு அரிசி இல்லை. பறவைகளே வெருட்டாவிட்