பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/204

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 181

அடால், சிறிது நேரத்தில் அரிசியெல்லாம் தீர்ந்து விடும் போலிருக்கின்றது. அதையும் அவ் வேட்டுவச்சி உணராமல்

இல்லை.

பறவைகளே வெருட்டலாம் என்ருல் கணவன் விழித்துக்கொள்வான் ; அவனுடைய தூக்கம் கெட்டுப்போய் விடும். அன்றியும், அந்த அரவத்தால் தன் மடப்பிணைக்கு இன்பம் அளித்துக் கொண்டிருக்கும் ஆண்மானும் வெருவி யேர்டிவிடும். அங்ங்னம் ஓடிவிட்டால், பார்வை மானின் இன்பம் கெட்டுவிடும். விழித்து எழும் கணவனும் பார்வைமானின் இன்பத்தைக்கூடக் கருதாமல் அந்தக் கலமான அம்பினல் வீழ்த்தவும் கூடும். அவற்றை யெல்லாம் எண்ணி எண்ணி அவ்வேட்டுவச்சி ஒன்றும் செய்

யாமல் வாளா இருக்கின்ருள்.’

இந்தக் காட்சியை விளக்கியுரைத்துப் பாட்டை மீண்டும் கடினச் சொற்களின் பொருளைக் கூறிக்கொண்டே ஒன்றிரண்டு முறை நன்குபடித்தால், பாட்டின் பொருள் தெளிவாகப் புலகுைம். இவ்வாறு கற்பித்த பிறகு ஆசிரியர் ஒருசில வினுக்களால் தன் விளக்கந் தருதலின் பயனை அளந்தறியலாம். இதற்குப் பிறகு மாணுக்கர்களுக்கு வினுக்களே விடுக்கும் வாய்ப்புக்கள் தந்தால், பாடம் அவர்கள் மனத்தில் நன்கு பதியும் ; பாடத்தில் வரும் கருத்துக்களும் தெளிவாக விளக்கம் அடையும். -

3. துணைக்கருவிகள்

வாய்மூலமாகக் கற்பித்தலில் விளக்கம் ஏற்படுவதைவிட, புலன்களுக்கும் கற்பனைக்கும் முறையீடு செய்து கற்பித்தலால் இன்னும் தெளிவு பிறக்கும். வகுப்பறைகளில் கற்பிக்க உதவும் கருவிகளைத் துணைக்கருவிகள் {Teaching aids) என்று குறிப்பிடுவர். அவை கற்பித்தலில் கவர்ச்சியை ஊட்டி கற்பதற்கு ஆவலேத் தூண்டுகின்றன. பள்ளிக் கல்வித் திட்டம் பல பாடத்திட்டங்களால் நிரப்பப்