பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 183

களில் பயன்படுகின்றன. தம் கருத்துக்களே மக்களிடையே பரப்புவதற்கு வாணிகத்துறை, பயிர்த்தொழில் துறை, தொழில்துறை நிலையங்கள் துணைக்கருவிகளைப் பல புதிய புதிய முறைகளிலெல்லாம் கையாண்டு மக்கள் மனத்தைக் கவருகின்றன. இன்று திரைப் படங்களைக் கொண்டு செய்யப்பெறும் விளம்பரங்களால்தான் வாணிகத்துறை வளர்ச்சியடைந்து வருகின்றது என்பதையும் காண்கின்ருேம்.

இவ்வாறு மக்கள் மனத்தை எளிதில் கவரும் பேராற்றல் வாய்ந்த துணைக்கருவிகளால் மொழியாசிரியர்கள் மாணுக்கர்களின் மனத்தைக் கவர்ந்து மொழிப் பயிற்ற லேத் திறம்படச் செய்யும் வழிவகைகளைச் சிந்தித்துச்செயல் முறைக்குக் கொண்டுவர முனையவேண்டும். சிலர் அவற்றை வெறும் ஆர்ப்பாட்டம் ' என்று கருதுகின்றனர்; ஒருசிலர் அவற்றின் அடிப்படையான உளவியற் கொள்கைகளே எண்ணி மகிழ்கின்றனர் ; பெரும்பாலோர் இப்புதிய நாகரிக முறையை அப்படியே ஒப்புக்கொண்டு எண்ணிப் பார்க்காமலேயே ஏராளமான துணைக்கருவிகள் தேவை என்று கூறுகின்றனர். ஆழ்ந்து சிந்தித்துத் தேவையான அளவு இடமறிந்து, காலமறிந்து, அவற்றைக் கையாண்டால்தான் வகுப்பறைப் பயிற்றலே வெற்றிபெறச் செய்யமுடியும். விருப்பப்படி யெல்லாம் அளவுக்கு மீறித் தேவையற்ற முறையில் அவற்றைப் பயன்படுத்தினுல் அவை விளக்கம் தருவதற்குப் பதிலாக மயக்க உணர்ச்சியை ஊட்டி, பாடம் பயிற்றலை ஒரு கேலிக் கூத்தாக ஆக்கிவிடும் என்பதை ஆசிரியர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும். அவற்றை வெற்றியுடன் கையாளுவதற்கு ஆழ்ந்த சிந்தனே வேண்டும் ; நிறைந்த அனுபவம் வேண்டும் ; நல்ல பயிற்சியும் வேண்டும்.

கற்பனைக்கு முறையீடு செய்யும் பாங்கினேயொட்டி கற்பிக்கும் துணைக்கருவிகளே வகைப்படுத்தலாம். முதலாவது, பொருள்கள்; இவை கற்பனேக்கு வேலை தருவதில்லே. இரண்டாவது, பொம்மைகள் ; இவை சிறிது