பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

184 தமிழ் பயிற்றும் முறை

கற்பனைக்கு வேலை தருகின்றன. மூன்ருவது, படங்கள் ; இவை இன்னும் சற்று அதிகமாகக் கற்பனைக்கு வேலை தருகின்றன. நான்காவது, உருவங்கள் முதலியவை : இவை மேலும் சற்று அதிகமாக மனத்திற்கு வேலே தருகின்றன. ஐந்தாவது வாய்மொழி மூலம் வெளிப்படும் சொற்கள் ; இச்சொற்கள் குறிக்கும் அனைத்தையும் கற்பனையில் எண்ணியே அறிந்து கொள்ள வேண்டும்.

(1) பார்க்கவேண்டிய பொருள்கள் : பொருள்களையே நேரில் கண்டு விட்டால், மாணுக்கர்கள் தம் கற்பனைக்கு வேலையின்றி அவற்றை நன்கு அறிந்து கொள்ளலாம். மகாபலிபுரக் கற்கோவில்கள், தஞ்சைப் பெரிய கோவில், நீராவிக் கப்பல்கள் போன்றவற்றைப்பற்றிய மொழிப் பாடங்களைக் கற்பிக்க நேரிடுங்கால், இயன்ருல் ஆசிரியர்கள் மாணுக்கர்களே. அவை இருக்கும் இடங்களுக்கே கூட்டிச் சென்று காட்டுதல் நன்று ; நேரில் அறிந்து கொள்வதைப்போல் எவ்விதத்திலும் பிற விளக்கங்களால் அறிந்து கொள்ள இயலாது. பிற சாதனங்களால் பெறும் போலி அனுபவத்தைவிட நேரில் பெறும் உண்மை அனுபவமே சிறந்தது. :

முதல் வகுப்புப் பிள்ளைகளுக்கு வீடு, வீட்டிலுள்ள பொருள்கள், பள்ளி, பள்ளியிலுள்ள பொருள்கள், பறவை. கள், விலங்குகள், தொழிலாளர்கள், கோயில்கள், அங்குள்ள தெய்வங்கள், தோட்டம், தோட்டத்திலுள்ள மரம், செடி, கொடிவகைகள் ஆகியவற்றைக் காட்டி அவற்றின் பெயர். களைத் தெரிந்து கொள்ளச் செய்யலாம். பொருள்களைப் பார்த்துப் பெயர்களைச் சொல்லிக் கொடுத்தால் அப் பெயர்கள் இளஞ்சிருர்களின் மனத்தில் வேரூன்றி நிற்கும்.

(2) பொம்மைகள் (Models) : பொருள்களை நேராகப் பார்க்க வாய்ப்பு இல்லாதவிடத்து அவற்றைப்போல்

  • பொய்மை - பொம்மை ; உண்மையான பொருள். களல்ல - பொருள்கள் போன்றவை. இவ்வாறு கூறுகின்ருர் பன்மொழிப் புலவர் திரு. வே. வேங்கடராஜுலு ரெட்டியார். இவற்றைப் படிமங்கள் என்றும் வழங்கலாம்.