பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 185

களிமண், மரம், தகரம் ஆகியவற்ருல் செய்யப்பெற்ற பொம்மைகள் அப் பொருள்களைப்பற்றி நன்கு அறிந்து கொள்ளத் துணைசெய்யும். கப்பல், வானவூர்தி, புகை, வண்டி எஞ்சின் போன்றவற்றைப் பார்த்தறியாத மாணுக்கர்கள் அவற்றைப்போல் தகரத்தினுல் செய்யப்பட்டு வண்ணம் தீட்டப்பெற்ற பொம்மைகளைக் கொண்டு அவற்றைப்பற்றி அறிந்து கொள்ளச்செய்யலாம். இளஞ்சிருர்களுக்கு மண்ணேக்கொண்டு சில பொம்மைகளைச் செய்யக் கற்றுக்கொடுத்தால், அவர்கள் பார்க்கும் வேறு பொம்மைகளின் தன்மைகளை நன்கு புரிந்து கொள்வர். பொம்மையின் தன்மையை அறியாதவர்கள் பொம்மைகள் உணர்த்தும் கூறுகளைப்பற்றிச் சிறிதும் அறிந்து கொள்ள இயலாது. நவராத்திரிப் பண்டிகையின்பொழுது கொலுவில் வைக்கப்பெறும் பொம்மைகள் சிறு பிள்ளைகளுக்கு அவை குறிக்கும் பொருள்களே அறிந்துகொள்ளத் துணைசெய்கின்றன என்று கருதலாம்.

(8) படங்கள் : படங்களில் பலவிதம் உண்டு. அச்சிட்ட படங்கள், கையில்ை வரையப்பெற்ற ஒவியங்கள், ஒளிப்படங்கள், பிலிம் படங்கள் முதலியவை அவற்றுள் சில. அவற்றைக்கொண்டு கற்பிக்கவேண்டிய செய்திகளே விளக்கமாகக் கற்பிக்கலாம்". படங்களைக்கொண்டு சிறு குழந்தைகளின் வாய்மொழிப் பயிற்சியைச் சுவை பெறச் செய்யலாம். படங்களைப் பார்த்து மகிழ்வதில் நம்மைப் போல்-ஏன் ? நம்மைவிட-சிறுவர்களுக்கு அவா அதிகம். தீபாவளி, பொங்கல் மலர்களிலுள்ள படங்களையும் செய்தித் தாள்களிலுள்ள விளம்பரப் படங்களையும் நாம் பார்த்து

o Mac Millan’s Class Pictures Ersirp A5&svůlstsib GypËதைகளுக்காகவும், தொடக்கநிலைப்பள்ளி மாளுக்கர்களுக்காக வும், உயர்நிலைப்பள்ளி மாளுக்கர்களுக்காகவும் வெளிவந் துள்ள வரிசைப் புத்தகங்களில் Literature என்ற பகுதியில் காட்டப்பெற்றுள்ளவை போன்று தமிழ் இலக்கியத்தைக் கற்பிக்கவும் ஆயத்தம் செய்யலாம் என்பதை ஆராய்ந்து 岔-6@f 「當。