பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/21

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


xix

கேற்ப மாற்றியமைத்துக் கொள்ளவும் நேரிடும். பதின்மூன்ருவது அத்தியாயத்தில் மாளுக்கர்களிடம் நல்ல கையெழுத்து அமைவதுபற்றியும் அவர்கள் எழுத்து வேலேகளில் காணக்கூடிய பிழைகள் பற்றியும் அவற்றைத் தவிர்ப்பதுபற்றியும் சில கருத்துக்கள் தெரிவிக்கப் பெற். றிருக்கின்றன. பதினன்காவது அத்தியாயத்தில் தமிழாசிரியர்கள் தம் பணியைத் திறமையுடன் ஆற்றுவதற்கு வகுத்துக்கொள்ள வேண்டிய திட்டங்கள்பற்றியும் பாடக் குறிப்புக்களின்’ இன்றியமையாமை பற்றியும் எடுத்துக். காட்டுக்களுடன் விளக்கப் பெற்றிருக்கின்றது. பதினேந்தாவது அத்தியநயத்தில் பள்ளியில் பயன்பட்டு வரும் புத்த" கங்களின் வகைகளையும் நல்ல புத்தகங்களின் இயல்புகளே யும் பற்றிய கருத்துக்களும் துணைப்பாடப் புத்தகங்களே ப் பயிற்றும் முறைகளும் நூலகப் படிப்பை மேற்கொள்ளும் வழிகளும் ஒரளவு விளக்கப்பெற்றுள்ளன. நவீன முறைகளைக் கையாண்டு, கற்பிப்பதனுல் தமிழ்மொழி கற்பதன் நோக் கங்களையொட்டி மாணுக்கர் பெறும் மொழியறிவையும் இலக்கிய அறிவையும் நவீன அளவியல் முறைகளே க். கொண்டே அளப்பது இன்றியமையாதது. சரியான அளவு கோலேக்கொண்டு அளந்தால்தான் உண்மையான நிலை புலனுகும். உளவியற் கலை வளர்ச்சியின் விளைவாக கல்வித்துறை அளவியல் குறித்து விரிவான நூல் ஒன்றைத் தமிழில் எழுத எண்ணியுள்ளேன். அளவியல் பற்றிய எல்லாக் கருத்துக்களும் அதில் தொகுத்துக் கூறப்பெறும்.

புத்தகத்தின் இறுதியில் இப் புத்தகத்தில் மேற்கொண்ட கலைச்சொற்களும் புத்தகம் எழுதப் பயன்பெற்ற நூல்களின் பெயர்களும் பொருட் குறிப்பு அகராதியும் பின்னிணைப்புக்களாகச் சீேர்க்கப் பெற்றிருக்கின்றன. கலைச் சொற்கள் ஆங்கிலத்தில் படிக்கும் பயிற்று முறைகளைத் தமிழ்மொழியில் அமைத்துக் கோடலுக்கும், மேற்கோள் நூல்கள் இப் புத்தகத்தைப் படிப்போரை மேலும் படிப்பில்கொண்டுசெலுத்துவதற்கும், பொருட் குறிப்புப் அகராதி பலிசெய்திகளே அவரவர் விரும்புகிறவண்ணம் தொகுத்தறிவதற்கும்