பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 187*

(5) வாய்மொழிச் சொற்கள் : கற்பித்தலில் வாய் மொழி மூலம் வெளிப்படும் சொற்களும் விளக்கந் தருகின்றன. தாய்மொழி பயிற்றலில் உவமை, உருவகம், தற்குரிப் பேற்றம் முதலிய அணிவகைகள் விளக்கத்திற்குப் பெருந்துணே புரிகின்றன. இத்தகைய சாதனங்களே கையாளுவதில் ஆசிரியர் விழிப்பாக இருக்கவேண்டும். மாளுக்கர் அறிந்த அனுபவத்தையே சொற்களால் விளக்கவேண்டும் ; கையாளும் சொற்களின் பொருள்களே அவர்கள் எளிதில் அறியும் முறையில் இருத்தல் வேண்டும். ஒரு கதை, ஒரு நிகழ்ச்சி, சுட்டுக் குறிப்புக்கள் (Allusions), ஒத்த கருத்துக்கள் முதலியவை விளக்கத்திற்குப் பெருந்துணை செய்யக் கூடும். கிட்டத்தட்டப் பொருந்தக்கூடிய எடுத்துக் காட்டுக்களையே கூறவேண்டும். சிந்தனையைக் கிளறக் கூடிய கற்பனேகளையும், உள்ளத்தைத் தொடக்கூடிய கருத்துக்களையும், உணர்ச்சியைத் தூண்டக்கூடிய சொல்லோவியங்களையும் கையாண்டால் கற்பிக்கும் பொருள் நன்கு விளக்கமடையும். அடிக்கடி டிேற்கொண்டவற். றையே திரும்பத் திரும்ப மேற்கொள்ளுதல் தவறு. இந்நூலாசிரியருக்குத் தெரிந்த கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் மூன்று அல்லது நான்கு ஆண்டுகட்கு ஒருமுறை புதிதாகச் சந்திக்கும் மாணுக்கர்களிடம் முன்னர்க் கையாண்ட கதைகளையும், நகைச்சுவை நிகழ்ச்சிகளையும் கூறி வருவது வழக்கம். இவ்வாறு சொல்லுவதை அறிந்த மானுக்கர்கள் அந்த ஆசிரியரைப்பற்றி ஏளனமாகப் பேசி அவருடைய அறிவுத்திறனேக் குறைவாக மதிப்பதுண்டு. சொந்த வாழ்க்கையில் அறிந்தவற்றை அதிகமாகப் பயன்படுத்தக் கூடாது. சொந்த வாழ்க்கையில் கண்டவற்றை அடிக்கடிக் கூற விரும்புவது இயற்கையே; அவற்றை விளக்கமாகவும் கூற முடியும். கூடிய வரை இந்நிகழ்ச்சிகளைக் குறைவாகக் கையாண்டால் நல்ல பலனை அளிக்கும். அவற்றைப் பயன் படுத்தும்பொழுது தன்மையில் கூறுவதைத் தவிர்க்க வேண்டும். இந்நூலாசிரியருக்குத் தெரிந்த மற்ருெரு கல்லூரிப் பேராசிரியர் அடிக்கடி "நான் இன்னுருடன் பேசிக்கொண்டிருந்தபொழுது ”, " நான் இன்ன இடத்