பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 90 தமிழ் பயிற்றும் முறை

வேலையில் ஒரு சிறிதும் கவனத்தைச் செலுத்தாது ஆசிரியருக்குப் பயந்து பிறரைப் பார்த்து எழுதி விடுகின்றனர். இதல்ை தவருண பயிற்சி உண்டாகின்றது. ஒரு சில மணி நேரத்தைப் பயனுள்ள முறையில் கல்வியில் செலுத்துவதற்கு வீட்டு-வேலை பெருந்தடையாக வுள்ளது. பெரும்பாலான வீடுகளில் அமைதியாக வீட்டு-வேலையைச் செய்ய வசதிகள் இல்லை. அன்றியும், யாதொரு நோக்கமுமின்றித் தரப்பெறும் வீட்டு-வேலையால் வீட்டில் மாணுக்கர்களின் இன்ப வாழ்க்கை கெடுகின்றது. வீட்டில் அமைந்துள்ள ஒரு சில வசதிகளையும் மகிழ்ச்சியுடன் துய்க்க வாய்ப்பின்றி வீட்டு-வேலையை முடிக்க வேண்டுமேயென்று எப்பொழுதும் கவலேயுடனும் மனத் தொந்தரவு பட்டும் அவர்கள் காலத்தைக் கழிக்கின்றனர். பள்ளியில் பகல் முழுவதும் படித்து அது போதாதென்று வீட்டிலும் படிப்பா என்று சில பெற்ருேர்கள் வீட்டு-வேலையைக் கடிகின்றனர்.

வீட்டு-வேலையின் இன்றியமையாமை : இன்றைய கல்வித் திட்டத்தை ஆராய்ந்தால், பள்ளியிலேயே எல்லாப் பாடங்களையும் கற்றல் இயலாது ; அதற்குப் பள்ளியில் நேரமும் இல்லை. அன்றியும், மானுக்கர்களாலேயே கற்க வேண்டியவற்றில் ஆசிரியர் அடிக்கடித் தலையிடுதலும் தவறு. தவிர, பள்ளியில் கற்றவற்றைத் திரும்பக் கூறுவதாலும், பன்முகப் பயிற்சியாலும் மனத்தில் பதிவதற்கு வீட்டு-வேலை பெரிதும் வாய்ப்பு அளிக்கின்றது ; வேறு வழிகளில் இப் பயிற்சிகளைத் தருவதற்கு வாய்ப்புக்களே இல்லை. மானுக்கருக்குத் தரப்பெறும் வீட்டு-வேலையால் பெற்ருேர்கள் ஓரளவு பள்ளியின் நடைமுறையையும், கற்பிக்கும் முறைகளையும் அறிந்துகொள்ள முடிகின்றது. வீட்டு-வேலே ஆசிரியர்தொடர்பை உண்டாக்குகின்றது. மாணுக்கரின் நலத்தில் இருசாராரும் என்ன என்ன செய்யவேண்டும் என்று எண்ணிப்பார்க்க வீட்டு-வேலை ஒருவாய்ப்பினே நல்குகின்றது. அன்றியும், பல மாணுக்கர்களுக்கு வீட்டு-வேலை படிப்பில் ஒரு நற்பழக்கத்தை உண்டாக்குகின்றது; சோம்பித் திரிபவர்களையும் வேலையில் ஈடுபடுத்துகின்றது. வீட்டு