பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பயிற்றலின் உபாயங்கள் 19 |

வேலே முறையாகப் பயிலும் பழக்கத்தை எய்துவிக்கின்றது. அறிவுத்துறையில் வேண்டக்கூடிய பழக்கமல்லவா இது ?

தன்மையும் அளவும்: வீட்டு-வேலையைப்பற்றிப் பல மாறுபட்ட கருத்துக்கள் தோன்றக் காரணமென்ன ? இன்று பள்ளிகளில் தரப்பெறும் வீட்டு-வேலையின் தன்மை என்ன ? அளவு என்ன? என்பவற்றை நாம் கட்டாயம் ஆராய்ந்து பார்க்கத்தான் வேண்டும். குறைகளிருப்பின் அவற்றைக் களேயவும் வேண்டும். பெரும்பான்மையான ஆசிரியர்கள் சிறிதும் சிந்தனேயின்றியே பாடப்புத்தகங்களில் ஒவ்வொரு பாடத்தின் ஈற்றில் காணப்பெறும் பயிற்சிகள் எல்லாவற்றையும் செய்துவரும்படி ஏவுகின்றனர்; அவற்றை முடிப்பதற்கு எவ்வளவு காலம் வேண்டும் என்பதைச் சிறிதும் எண்ணிப் பாராமலேயே ஏவுகின்றனர். அவற்றைச் செய்து வருவதால் மாணுக்கர்கட்கு நேரிடும் மொழியறிவு என்ன என்பதை அவர்கள் சிறிதும் எண்ணிப்பார்ப்பதே இல்லை. ஒரு சிலர் வீட்டு-வேலையையே தருவதில்லை ; வீட்டு-வேலையைப்பற்றியும் அதன் பயனைப்பற்றியும் அவர்கள் ஒருபொழுதும் கருதுவதே இல்லை. பொதுவாக ஆசிரியர்கள் என்னதான் பயிற்சி பெற்ருலும் என்னதான் கல்வியைப்பற்றிய புதிய கருத்துக்களே அறிந்தாலும் மாளுக்கர்களுக்கு வீட்டு-வேலே தரும்பொழுது தம் பாடமே எல்லாவற்றையும்விட மிகவும் முக்கியமானது என்றும் கருதுகின்றனர். கல்வி குழந்தைக்காகத்தான் அளிக்கப்பெறுகின்றது என்பதை அவர்கள் எண்ணுவதேயில்லே. தம் பாடத்தையே அதிகமாக எண்ணி அளவுக்கு மீறிய வீட்டு-வேலையை மாணுக்கர்களின்மீது சுமத்தி விடுகின்றனர். ஒவ்வொரு பாட ஆசிரியரும் இவ்வாறு வீட்டுவேலையைக் கொடுத்தால் மாளுக்கர் அவ் வேலையை எவ்வாறு செய்ய இயலும் ? அவற்றைச் செய்து முடிப்பதற்கு எவ்வளவு காலம் ஆகும் ? என்பதை எவருமே எண்ணிப்பார்ப்பது இல்லே ; எவருமே வீட்டு-வேலை எதற்காகக் கொடுக்கப்படுகின்றது என்பதைச் சிந்தித்துப் பார்ப்பதில்லை. பாடப்புத்தகங்களில் காணப்பெறும் பயிற்சிகள் யாவும்