பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1932 தமிழ் பயிற்றும் முறை

ஆழ்ந்த சிந்தனையின் விளேவுகள் என்று சொல்ல இயலாது. அவற்றைத் தயாரித்தவர் வேறு ; வகுப்பில் பாடம் கற்பிப்பவர் வேறு. இருவர் நோக்கமும் ஒன்ருக இருக்க முடியுமா ? ஒருவித நோக்கமுமின்றி வீட்டு-வேலையைத் தருவதால் நற்பயன் ஒன்றும் விளேயாது ; அதற்கு மாருக, தீமைதான் விளேயும்.

நல்ல வீட்டு-வேலை: வீட்டு-வேலையால் நற்பயன் விளைய வேண்டுமாயின் அது நன்முறையில் சிந்தித்துக் கொடுக்கப்பெறல் வேண்டும். வீட்டு-வேலை தனிப்பட்ட மாணுக்கர்களின் ஆற்றல்களே வளர்ப்பதாக இருத்தல் வேண்டும். வீட்டு-வேலை விருப்பச் செயலாகவும் இருக்கலாம் ; அப்படியிருப்பதால் கேடு ஒன்றும் விளைந்துவிடாது. பிறர் துணையின்றி செய்யக்கூடியதாக, இருந்தால் மாணுக்கரின் புதுப்போக்குடைமையை (originality) வளர்க்கத் துணேபுரியும். அது மாணுக்கர்கட்குக் கவர்ச்சி தரும் முறையி. லிருந்தால் அவர்கள் உற்சாகத்துடன் அதில் ஈடுபடுவர் ; சுமையாகவே கருதார். வீட்டு-வேலை பாடப்புத்தகங்களை யொட்டியும் கற்பிக்கும் பாடத்தையொட்டியும் இருக்கவேண்டும் என்ற கட்டாயமில்லை. சில சமயம் வகுப்பில் கற்பித்த பாடங்களே யொட்டியும் இருக்கும் ; சில சமயம் மானுக்கர்களின் படைப்பாற்றல்களே வளர்க்கக் கூடியதாகவும் இருக்கலாம். ஆயினும், மானுக்கருக்குக் கொடுக்கப்பெறும் வீட்டுவேலே திட்டமானதாக இருத்தல் வேண்டும். கிட்டத்தட்ட மாணுக்கர் எழுதிவரும் விடைகள் ஒரு மாதிரியாக இருக்குமாறு பயிற்சிகள் அமைய வேண்டும் ; ஒரே விணுவுக்குப் பல விடைகள் வருமாறு வினுக்கள் அமைவதைத் தவிர்த்தல்வேண்டும். கலேநோக்கத்துடன் செய்யவேண்டிய வீட்டு-வேலைகள் எத்தனையோ உள்ளன.

மொழிப்பாடத்தைப் பொறுத்தமட்டிலும் கதைப் படித்தல், நாடகம் நடித்தல், கவிஞர்கள் அறிஞர்கள் ஆகியவர்களின் படங்களைச் சேகரித்தல் முதலியவை வீட்டு.வேலை