பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பிரிவு-3 : மொழித்திறன்களும் துறைகளும்

ஒலிகளே அறிகுறிகளாக அமைத்துக்கொண்டு கருத்துக் களே உணர்த்துவது மொழி. உலகிற்கு ஒலிகளும் கருத்துக் களும் பொதுவானவை. மொழி இல்லையேல் கருத்துக்களின் வளர்ச்சியே இராது என்று கூறலாம். மொழி கற்றலில் பேசு தல், படித்தல், எழுதுதல் என்ற முறைதான் இயல்பானது; ஒழுங்கானது. பேச்சுப் பழக்கம் நன்கு அமைந்த பிறகே படிக்கும் பழக்கத்தைத் தொடங்கவேண்டும் ; அதன் பிறகு எழுத்துப் பயிற்சி தருதல் வேண்டும். இந்த மூன்றையும் ஒன்றன் பின் ஒன்ருகத்தான் தொடங்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை. மூன்றையும் குழந்தை, மொழியைக் கற்கும் திறனையறிந்து தொடர்ந்தே கற்பிக்கலாம்.

வாய்மொழிப் பயிற்சியில் உரையாடல், செவிலிப் பாடல்கள், ஆட்டப் பாடல்கள், கதை சொல்லுதல், நடிப்பு முதலியவை பெரும்பங்கு பெறுகின்றன.இந்நிலையில் திருத்த மற்ற பேச்சுக்களேயுடைய குழந்தைகளின் பேச்சு திருந்து கின்றது. அதன் பிறகு அவர்கள் மேல் வகுப்புக்களுக்கு வந்ததும் சொற்பொழிவுகள், சொற்போர் போன்றவற்றில் பங்கு பெறுகின்றனர். இலக்கியக் கழகம் இவற்றிற்குப் பொதுமேடையாக அமைகின்றது. இதே சமயத்தில் படிப் பிலும் அவர்களிடம் அதிக முன்னேற்றம் காணப்பெறு கின்றனது. படிப்பு பயிற்றலிலும் கீழ்வகுப்பில் ஆசிரியர்கள் எழுத்து முறை, சொல் முறை, சொற்ருெடர் முறை ஆகிய வற்றை மேற்கொண்டு கற்பிக்கின்றனர். இதற்குப் பல வகைச் சாதனங்களையும் கையாளுகின்றனர். நாளடைவில் வாய்விட்டுப் படித்தல், வாய்க்குட் படித்தல் ஆகிய இரண் டிலும் மாணுக்கர்கள் நல்ல திறன்களைப் பெறுகின்றனர்.