பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7. வாய்மொழிப் பயிற்சி

வாய்மொழி பயன் படாத துறைகளே வாழ்க்கையில் இல்லை எனலாம். சமூக வாழ்வில் மக்கள் ஒருவரோடொரு வர் அளவளாவித் தங்கள் கருத்துக்களேத் தெரிவித்துக் கொள்ளவும், வாழ்க்கையின் தேவைகளையும் ஏனைய பிரச்சினைகளையும் ஒருவருக்கொருவர் அலசி எடுத்துச் சொல்லவும் வாய் மொழி பயன் படுகின்றது. வாழ்வில் பேச்சில்தான் தாய்மொழி அதிகமாகப் பயன்படுகின்றது. குடும்ப விவகாரங்கள், தொழில் முறைகள், வாணிகத் துறைபற்றிய விவரங்கள், குடிமைப்பாங்கு, அரசியல் செய்திகள் முதலிய பலவற்றை வாய்மொழியில் எடுத்துக் கூறுவதில் மக்கள் தேர்ச்சி பெறவேண்டியது இன்றியமை .யாததாகும். இன்றைய வாழ்வில் பேச்சுள்ளவர்களே உலகை ஆள்வர் என்பதை அறியவேண்டும். பொது வாழ்வில் பேச்சுத்திறமையுள்ளவர்களே வெற்றியுடன்

திகழ்வதையும் காணலாம். வாயுள்ள பிள்ளே தான் பிழைக்கும்’ என்ற பழமொழியும் ஈண்டு சிந்தித்துப் பார்த் தற்குரியது. அன்ருட வாழ்க்கையில் நூற்றுக்குத்

தொண்ணுறு பங்கு வாய்மொழியே பயன்படுகின்றது. வாழ்க்கைக்குக் குழந்தைகளேத் தயாரிப்பதே கல்வியின் நோக்கமாதலால் வாய்மொழிப் பயிற்சியும் கல்வித் திட்டத் தில் முக்கிய இடம் பெறவேண்டுமென்பதை வலியுறுத்த வேண்டியதில்லை.

வாய்மொழிப் பயிற்சியின் நோக்கங்கள் : மொழி கற்பித்தலின் மூன்று பிரிவுகளாகிய வாய்மொழி, படிப்பு, எழுத்து ஆகியவற்றுள் வாய்மொழியே மிகவும் முக்கிய மானது. மொழிப் பயிற்சியின் முதற்படியும் இதுதான். வாய்மொழிப் பயிற்சியே பேசுவதற்கு அடிப்படை. பேசு