பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 98 தமிழ் பயிற்றும் முறை

வதே படிப்பதை விடவும் எழுதுவதை விடவும் விரைவாக வும் எளிதாகவும் கைவரக்கூடியது. பேசுதல், படித்தல், எழுதுதல் என்பதே மொழிகற்றலின் இயற்கையான முறையாகும். பேசுதல், பேச்சுப் பழக்கத்தால்தான் வரும். செந்தமிழும் நாப்பழக்கம்’ என்ற பழமொழி ஈண்டு சிந்திக் கற்பாலது. தொடக்கநிலைப் பள்ளியில் வந்து சேரும் இளம் மாணுக்கர்கள் வயதிலும், மன வளர்ச்சியிலும், அறி விலும் மிகச் சிறியவர்கள். அவர்களிடம் ஓரளவு நல்ல பேச்சுப் பழக்கம் அமைந்திருக்கும். வீட்டில் பெற்ருேர், உற்ருர், உறவினர், விளையாட்டுத் தோழர்கள் முதலியவர் களுடன் பழகியிருப்பதால் அவர்கள் பேசுவதைக் கேட்டு அறிந்து கொள்ளவும், தமது கருத்துக்களைத் தெரிவிக்கவும் ஓரளவு வாய்மொழிப் பயிற்சியினைப் பெற்றிருப்பர். குழவி நிலையங்களிலிருந்து வந்து சேரும் குழந்தைகள் மிகக் குறைவு. இத்தகைய நிலையங்கள் ஒரு மாவட்டத் திற்கு ஒன்றுகூட இன்னும் ஏற்படவில்லை. எனவே, தொடக்கநிலைப் பள்ளியில் சேரும் குழந்தைகள் பெற்றி ருக்கும் பேச்சுப் பழக்கங்கள் யாவும் வீட்டில் பெற்றவையே. ஆதலால், இக் குழந்தைகளின் பேச்சுக்களில் பல குறைகள் காணப்படும். தெளிவற்ற பேச்சு, பிழையான உச்சரிப்பு, விடுபட்ட முடிவுகள், வேகமான பேச்சு முத லியவை இக் குறைகளாகும். அன்றியும், வீடுகளிலும் தெருக்களிலும் பழகுவதனுலும் குழந்தைகளிடம் பிழை. யான பேச்சுப் பழக்கங்கள் ஏற்பட்டிருக்கும். எனவே, திருத்தமான பேச்சுப் பழக்கங்களே உண்டாக்கவும், தவருண பழக்கங்களைக் களைந்தெறியவும் வாய்மொழிப் பயிற்சிகள் பள்ளியில் தரப்பெறுகின்றன.

பள்ளிக்கு வரும் மாணுக்கர்கள் யாவரும் ஒரே மாதிரி யான திறமையுடன் இரார். படித்த குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் சொல்வளம் செழுமையாக இருக் கும். படிக்காத குடும்பங்களிலிருந்து வரும் குழந்தைகளின் சொல்வளம் நலிந்து காணப்படும். நகர்ப்புறங்களில் வாழும் குழந்தைகளின் சொல்வளம் ஒருவிதமாகவும்,