பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 20 1

காரணம் என்ன ? இதுகாறும் எழுத்துப் பயிற்சியே முக்கியமெனக் கருதப்பட்டு அதிலேயே மக்கள் அதிகக் கவனம் செலுத்தினர். எழுத்து நடை ஒருவித சம்பிரதாய முறையில் வளர்ந்தது. பேச்சு நடையில் மக்கள் அதிகக் கவனம் செலுத்தாது, விருப்பப்படி யெல்லாம் ஒருவித

வரையறையின்றி பேசி வரலாயினர். எனவே, எழுத்து

நடையிலும் உயிரோட்டம் இல்லாது போயிற்று ; பேச்சு

நடையிலும் கொச்சை மொழிகளும் இழிவழக்குகளும்

புகத் தொடங்கி விட்டன. மறுமலர்ச்சி எழுத்தாளர்களில் பலர் பேசுவதுபோல் எழுதவேண்டும் என்று கருதி

எழுத்து நடையையும் குலைத்து வருகின்றனர். நல்ல

தமிழில் தெளிவாகப் பேசவும் வேண்டும்; தெளிவாக

எழுதவும் வேண்டும். பேச்சு நடை வேறு, எழுத்து நடை

வேறு என்றில்லாதபடி இரண்டையும் ஒரேவிதமாக

அமைப்பதில் அனைவரும் மு ைய வேண்டும். இப்படிச்

செய்தால்தான் உயிருள்ள பேச்சு கேட்போரைத் தன்வசம்

ஈர்ப்பதுபோல, வேகமான எழுத்தோவியம் படிப்போரையும்

கவரும் ; மொழியும் புத்துயிர் பெற்று வளரும். இதற்குப்

பள்ளி வாழ்க்கையில் எல்லா நிலையிலும் நல்ல முறையில்

வாய்மொழிப் பயிற்சிகளைத் தருதல் வேண்டும்.

தாய்மொழிப் பாடத்தில் வாய்மொழிப் பயிற்சிகள் : மொழிப்பாடத்தில் பேச்சுப் பயிற்சி பொதுவாக எல்லா வாய்மொழி வேலைகளிலும் தரக்கூடும் என்ருலும், முக்கியமாக சில துறைகள் வாய்மொழிப் பயிற்சிக்கு மிகவும் ஏற்றவை. தொடக்கநிலைப் பள்ளி வகுப்புக்களில் குழந்தைகளுக்கு விருப்பமான பொருள்களைப்பற்றி உரையாடுதல், செவிலிப்பாட்டுக்கள், ஆட்டப் பாடல்கள், கதை சொல்லல், நடிப்பு, படங்கள் ஆகியவற்றை இதற்கு நன்கு பயன்படுத்தலாம். நடுநிலைப்பள்ளி வகுப்புக்களில் நாடக முறையில் உரையாடல், அப்போதைய எற்பாடாக மேற்கொள்ளப்பெறும் நடிப்பு, சிறு சொற்பொழிவுகள் (Littleman lectures), கதை சொல்லுதல், நடிப்பு, வருணனை செய்தல், கலந்து shiii 55b (Discussion) முதலியவற்றில் வாய்மொழிப் பயிற்