பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 03

உரையாடலுக்குரிய பொருள்கள்: உரையாடலுக்குரிய பொருள்கள் மாளுக்கருடைய வயது, அறிவு, பட்டறிவு முதலியவற்றையொட்டி அமையவேண்டும். தவிர, அவை அவர்களுடைய விருப்பத்தைத் தூண்டக்கூடியவைகளாகவும் இருக்கவேண்டும். குழந்தைகளுடைய அறிவிற்கும் அவாவிற்கும் அப்பாற்பட்ட பொருள்களைப்பற்றிப் பேசுவதால் யாதொரு நன்மையும் ஏற்படாது. தொடக்கத்தில் குழந்தைகளுக்குத் தங்களைப்பற்றியும் தங்களுடன் நெருங்கிய சூழ்நிலையிலுள்ள பொருள்களைப்பற்றியும் அறிய அதிக விருப்பம் உண்டாதல் இயற்கை. குழந்தைகளின் வகுப்பறை நிகழ்ச்சிகளைப்பற்றியும், வெளியில் அவர்கள் வாழ்க்கையில் குறுக்கிடும் நிகழ்ச்சிகளைப்பற்றியும் உரையாடுதல் அவர்களுக்குக் கவர்ச்சியைத் தரலாம். தொடக்க நிலைப்பள்ளி முதலிரண்டு வகுப்புக்களில் வீடு, குடும்பம், பள்ளி, உறவினர், நண்பர், உணவு, உடை, விளையாட்டு, தோட்டம், பண்டிகைகள், திருவிழாக்கள், தொழில்கள், நற்பழக்கங்கள், பிராணிகள் முதலிய பொருள்களைப்பற்றிக் குழந்தைகளே உரையாடும்படி செய்யலாம். இந்நிலைப்பள்ளி மேல் வகுப்புக்களில் மேற்கூறிய பொருள்கள் மட்டுமன்றி அவரவர் வகுப்பு நிலைக்கேற்றவாறு அவர்களுக்குப் பற்றுள்ள செயல்கள், சிறு நிகழ்ச்சிகள், செய்திகள், நாட்டு நடப்புக்கள், வாணிகம், போக்கு வரவு வசதிகள், ஆட்சிமுறை முதலியவற்றைப் பற்றிப்பேசச் செய்யலாம். கைத்தொழில்கள் செய்வதற்கு வேண்டிய பொருள்களைப்பற்றியும், அவற்றைச் சேகரிக்கும் முறைகளைப்பற்றியும் உரையாடல் நடைபெறச் செய்யலாம்.

உரையாடல் முறை : தொடக்கத்தில் ஆசிரியர் குழந்தைகளுடன் இயல்பாகப் பேசவேண்டும். முதன் முதலாகத் தம்மிடம் புதிதாக வரும் குழந்தைகளுடன் அளவளாவி அவர்களோடு உணர்வொற்றுமை ஏற்படுத்திக் கொள்வதிலும், அவர்களுடன் உரையாடிக் கதை சொல்லி அவர்கள் கூச்சத்தைத் தெளிவிப்பதிலும் முதல் ஒன்றிரண்டு மாத காலத்தைக் கழிக்கலாம். அவ்வாண்டின் எஞ்சிய மாதங்