பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

仑04 தமிழ் பயிற்றும் முறை

களில் பள்ளி நேரத்தில் குழந்தைகள் தெளிவாகவும், திருத்தமாகவும், இயற்கையாகவும் பேச ஆசிரியர் கற்றுக் கொடுக்கவேண்டும். தொடக்கத்தில் கொச்சை மொழி. களையும் சிற்சில இடங்களில்மட்டும் சொற்களே ஆளுதல், சொல்லின் ஈற்ருெலியை இசையாது விடுதல், தெளிவின்றி இசைத்தல் முதலிய உச்சரிப்புக் குறைபாடுகளுடன் பேசும் பெரு வழக்கினையும் மாற்றுதலில் ஆசிரியர் கருத்தினைச்

செலுத்தவேண்டும்.

குழந்தைகளுடன் உரையாடும்பொழுது ஆசிரியர் இன்முகம் காட்டி, அவர்களுடன் அன்புடனும், பரிவுடனும் நடந்து கொள்ள வேண்டும். வகுப்பறைக் கென்று ஒரு தனி மொழியை மேற்கொள்ளாது இயல்பாகப் பேசும் மொழியைக் கையாள வேண்டும். உரையாடலில் குழந்தைகளுக்கு விருப்பம் உண்டாகும்படிப் பேசவேண்டும். ஆசிரியருடன் உரையாடும் இளம் மானுக்கர்களுக்கு அவர்களுக் குள்ளேயே உரையாடும் வாய்ப்பினையும் நல்க வேண்டும். உரையாடும்பொழுது குழந்தைகள் வினவுவதை ஆசிரியர் பிரியமாக வரவேற்கவேண்டும்.

ஆசிரியர் உரையாடலே மிகத் திறமையுடனும், தொடர்பாகவும் தொடங்கவேண்டும். எடுத்துக்காட்டாக உணவு, :உடைகள் பற்றி இவ்வாறு உரையாடலாம் : சமைத்தல்வேக வைத்தல், ஆவியில் வேக வைத்தல், சமையல் ஆள், காலே, பகல், இரவு உணவுகள், பான வகைகள், காய்கறிகள், கீரை வகைகள், பருப்பு வகைகள், பழவகைகள், சிற்றுண்டிகள், நெய், தயிர் முதலியன பொருள் தொடர்பாக வருமாறு உரையாடலாம். உடைகள்-நூல், பட்டு, கம்பள ஆடைகள்- அரையில் கால் சட்டையா, வேட்டியா பெற்ருேர் உடன்பிறந்தாரின் உடை வகைகள்-நாள் தோறும் துவைத்தல் உண்டா அல்லது சலவையாஎன்பவை போன்ற செய்திகளைத் தொடர்பாக அமைத்து :உரையாடலே மேற்கொள்ளலாம்.