பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 205.

முதல் இரண்டு வகுப்புக்களில் பாடல்களை உரையாடலில் பயன்படுத்தலாம். மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புக் களில் ஒரு சிறு நிகழ்ச்சியை முதலும் முடிவும் தெளிவாய்த் தோன்றுமாறும், பொருத்தமற்ற செய்திகளைப் புகுத்தாமலும் எடுத்துக் கூறுவதில் வாய்மொழிப் பயிற்சி தரலாம். உரையாடல், நாடகப்பகுதி ஆகியவற்றை நடிப்பதிலும், கட்டுரை வேலைக்கு அடிப்படையாக ஒரு கதை அல்லது. நிகழ்ச்சியைப்பற்றிய குறிப்புகளே நிரல்பட அமைத்தல், கதையின் தொடக்க வாக்கியத்தை ஆசிரியர் கூறி ஏனேய வற்றை மாணுக்கர்களேயே ஒவ்வொருவராகக் கூறும்படி செய்து கதையை முடித்தல், ஏற்ற தலைப்புக்களைக்கொடுத்து மாணுக்கர்களின் மனுேபாவனைப்படி கதையை விரிவாகச் சொல்லச்செய்தல், ஒருவர் சொல்லிய செய்தியைப் பிறரிடம் போய்த் தெரிவிக்கச் செய்தல், பார்த்ததையும் செய்ததையும் விவரிக்கச் செய்தல் போன்றவற்றிலும் உரையாடல் மூலம் வாய்மொழிப் பயிற்சிகளேத் தரலாம்.

நடுநிலைப் பள்ளி வகுப்புக்களில் தனிப்படங்கள், தொடர் படங்கள், கிடைப் படங்கள் (Pians), வரிவடிவங்கள் முதலியவற்றின் பொருளை உணரச் செய்து வாய்மொழி யாக விளக்குவதில் பயிற்சிகள் தரலாம். ஒரு கதை அல்லது நாட்டு வரலாறு, இலக்கியப்பகுதி ஆகியவற்றி லிருந்து எடுக்கப்பெற்ற செய்தியை நாடக முறையில் உரையாடச் செய்வதில் வாய்மொழிப் பயிற்சிக்கு வாய்ப்புக்கள் தரலாம். ஒரு கதை அல்லது நிகழ்ச்சியைச் சந்தர்ப்ப வேறுபாட்டிற்கேற்ப வெவ்வேறு விதமாகச் சொல்வதில் பயிற்சிகள் தரலாம். எடுத்துக்காட்டாக ஒரு மோட்டார் விபத்தை மோட்டார் ஒட்டி ஊர்க்காவல் நிலையத்தில் (Police Station) உரைப்பது போலவும், அதை ஊர்க்காவலன் நீதிமன்றத்தில் தெரிவிப்பது போலவும், மோட்டார் ஒட்டியும் அவன் நண்பனும் அதனே உரையாடுவது போல வும், நிகழ்ச்சியைக் கண்ணுற்ற ஒருவன் தன் நண்பனுக்குக் கடிதம் மூலம் அதனைத் தெரிவிப்பது போலவும், பத்திரிகை நிருபர் ஒருவர் அச் செய்தியைப் பத்திரிகைக்கு எழுதி.