பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 தமிழ் பயிற்றும் முறை

யனுப்புவது போலவும், இன்னும் பல மாதிரியாகவும் பெயர்த்து அமைப்பதில் வாய்மொழிப் பயிற்சிகள் தரலாம். படித்த அல்லது கேட்ட கதையைத் திரும்பச் சொல்லுதலிலும், கொடுத்த குறிப்புச் சட்டகத்தைக் (Out clines) கொண்டு முழுக்கதையை அமைத்துக் காட்டுவதிலும் வாய்மொழிப் பயிற்சிக்கு இடம் உண்டு. ஏதாவது ஒரு கதையை நாடக முறையில் உரையாடலாக (Dialogue) அமைத்தும் வாய்மொழிப் பயிற்சி தரலாம்.

உரையாடலின் நண்மைகள் ; உரையாடல் நடைபெறும் பொழுது குழந்தைகள் ஒருவரோடொருவரும் ஆசிரியருடனும் மிகவும் நெருங்கிப் பழகுவதால் பள்ளியைக் குழந்தைகள் நன்கு விரும்புவர். குழந்தைகளுக்குள்ளேயே தோழமை அதிகரிக்கும். ஆசிரியரும் குழந்தைகளின் தன்மைகளேக் கூர்ந்து உணர்ந்து அவர்களே உள் ளன்புடன் நேசிக்கக்கூடும். இயல்பான முறையில் உரையாடல் நடைபெற்ருல் குழந்தையின் இயற்கை ஆற்றல்கள் வளரும்.

2. செவிலிப் பாடல்களும் ஆட்டப் பாடல்களும்

சிறுவர்களுக்கான பாப்பாப் பாட்டு, செவிலிப் பாட்டு, ஆட்டப்பாடல், சிறிய கதைப் பாடல் முதலியவற்றை நெட்டுருச் செய்து ஒப்புவித்தல் வாய்மொழிப் பயிற்சிக்கு உதவக்கூடிய ஒரு சிறந்த வழியாகும். இவற்றை நெட்டுருச் செய்யும்பொழுதும், ஒப்புவிக்கும் பொழுதும் அடிக்கடி சொற்களேக் கூறுவதால் சொற்களின் ஒசை, பாடலின் இனிமை, புதிய சொற்களின் அறிவு முதலியவை உண்டாவதுடன் நல்ல உச்சரிப்பு, குரல் ஏற்றத் தாழ்வு ஆகிய நல்ல மொழிப் பழக்கங்களும் ஏற்படும். குழந்தைகள் அபிநயத்துடன் பாட்டுக்களே ஒப்புவிக்கும்பொழுது விளே. யாட்டு முறையில் கற்றல் நடைபெறுகின்றது.

வீட்டில் தாய்மார் சிறு குழந்தைகளுக்குச் செவிலிப் பாட்டுக்களேக் கற்பித்தலேயும், அவர்கள் உறங்கும்பொழுது