பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

திருந்திய (இரண்டாம்) பதிப்பு

நூலின் அடிப்படைக் கருத்துக்களில் அதிகமாற்றம் ஒன்றும் இல்லை. கலைச்சொற்களிலும் இயல் அமைப்புக்களிலும் மாற்றம் செய்யப்பெற்றுள்ளது. நடையிலும் அடிக்குறிப்புக்களிலும் திருத்தம் செய்யப்பெற்றுள்ளது. நூலின் உடலில் இடையிடையே சில ஆங்கிலச் சொற்கள் விளக்கத்திற்காக நுழைக்கப்பெற்றுள்ளன.

இந்தப்பதிப்பினை என் அரிய நண்பர் பேராசிரியர் எஸ். திருவேங்கடாச்சாரியார் அவர்களின் ஆங்கில முன்னுரை அணிசெய்கின்றது. பேராசிரியர் ஆச்சாரியார் அவர்களுடன் பதினான்கு ஆண்டுகள் நெருங்கிப் பழகியுள்ளேன் ; பத்து ஆண்டுகள் அழகப்பா ஆசிரியர் பயிற்சிக்கல்லூரியில் அவருடன் சேர்ந்துப் பணியாற்றியுள்ளேன். இருபத்தைந்து ஆண்டுகட்குமேல் கல்வித்துறையில் பல நிலைகளில் பணியாற்றி அனுபவம் பெற்ற என் நண்பர் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற மேடுைகளில் பல கல்வி நிலையங்களைப் பார்வையிட்டுக் கல்விபற்றிய பல கருத்துக்களே அறிந்தவர். வடமொழிப் புலமை மிக்கவர்; தமிழிலும் நல்ல பயிற்சியுடையவர். எந்தப் பிரச்சினையையும் நுணுகியறிந்து தெளி வாகப்பிறர்க்கு உணர்த்தும் பெற்றியர். ஆங்கிலத்திலும் அருந்தமிழிலும் கேட்டார் பிணிக்கும் தகையராய்க் கேளாரும் வேட்ப மொழியும் சொல்வன்மை வாய்ந்தவர். பல நூல்களின் ஆசிரியர் ; சிறந்த ஆய்வாளர். இத்தகைய என்கெழுதகை நண்பர் இந்த நூலுக்கு ஆங்கில முன்னுரை வழங்கியமைக்கு என் உளங்கனிந்த நன்று என்றும் உரியது.

இத் திருந்திய பதிப்பு வெளிவருவதற்கு என் முயற்சியை நிறைவேற்றி வைத்த பைந்தமிழ்ப் பின் சென்ற பச்சைப் பசுங் கொண்டலின் திருவடிகளே நினைந்து போற்று கின்றேன்.

ந. சுப்பு ரெட்டியார்.

திருப்பதி, 15-03-64