பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

208 தமிழ் பயிற்றும் முறை

பயன்படும். "மலரும் மாலையும்’ என்ற கவிதைத் தொகுப்பில் மழலை மொழி என்ற பகுதியில் காணப்படும். கிளி' 'காக்காய்', பசு', கடிகாரம் கோழி’, ‘நாய்', 'சைக்கிள்' “பசுவும் கன்றும் போன்ற பாட்டுக்கள் இளம் உள்ளங் களுக்குப் பெருவிருந்தாக அமையும். சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார் குழந்தைப் பாட்டுக்கள் கொண்ட ஒன்றிரண்டு சிறு நூல்களே வெளியிட்டுள்ளனர். இவற்றைத் தவிர சிறுவர் இன்பப் பாடல்கள்’ என்ற தலைப்பில் பசுமலை வீ. பா. கா. சுந்தரம் என்பவர் ஒரு சில பாடல்களடங்கிய சிறு நூல் ஒன்றை வெளியிட்டுள்ளார். மலரும் உள்ளம்’ என்ற தலைப்பில் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் பாடல்களைப் பாரி நிலையத்தார் வெளியிட்டுள்ளனர். இப் புத்தகம் மிக அழகாகப் பதிப்பிக்கப்பெற்றுள்ளது. இந்நூல்களிலுள்ள பாடல்களே ஆசிரியர்கள் நல்ல முறையில் கையாளலாம். அடியிற் காட்டியுள்ள பாடலே இரண்டாம் வகுப்புக் குழந்தைகளுக்கு வாய்மொழிப் பயிற்சியாகத் தரலாம்; இரண்டு பேருக்கு இதை விளுவிடை முறையில் பயிற்றுவிக்கவேண்டும். பையன் : பாட்டில் வல்ல அவ்வையாரே!-ஏளுே

காட்டில் கடும் வேளை வந்திரோ ? அவ்வை நடந்து நான் களைப்படைந்தேன்-நல்ல

நாவல் பழம் தின்னவே வந்தேன். பையன் : சூடுள்ள கனிகள் வேண்டுமா?-அன்றிச் சூடற்ற கனிகள் வேண்டுமா ? அவ்வை : பழங்கள் சுடுமோ ? எண்ணுவாய் !-சுடாப்

பழங்கள் உதிரப் பண்ணுவாய் ! பையன் : ஊதிஊதித் தின்கிறீர் ஏனுே ?-தின்னும்

உதடும் சுடுவதால் தானே ? அவ்வை வேந்தரையும் வெல்லும் என்னையே-இன்று

வென்றதால் புகழ் வேள் உன்னையே. பாட்டின் கதைச்சுவையில் ஈடுபடும்பொழுது குழந்தைகள் மகிழ்வெய்துவர். கீழ்க்கண்ட பாடலே மூன்ரும் வகுப்புக்