உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 209

குழந்தைகளுக்கு வாய்மொழிப் பயிற்சியாகப் பயன் படுத்தலாம்.

அத்தை அத்தை நெய் ஊற்று

அன்பாய் அன்பாய் நெய் ஊற்று அகத்திக் கீரைப் பிண்ணுக்கு

அதிலே கொஞ்சம் நெய் ஊற்று இந்த உருளைக் கிழங்கினிலே

இன்னும் கொஞ்சம் நெய் ஊற்று பிஞ்சுக் கத்தரிக் காயினிலே

பின்னும் கொஞ்சம் நெய் ஊற்று மெதுவாய்க் கொஞ்சம் நெய் ஊற்று

மேலும் கொஞ்சம் நெய் ஊற்று.

இதையும் இளஞ்சிருர்கள் இன்பமாகப் பாடி மகிழ்வர். நான்காம் வகுப்பு மானக்கர்களுக்கும் வாய்மொழிப் பயிற்சிக்கு அடியிற் காணும் பாடலைப் போன்ற பாடல்களைப் பயன்படுத்தலாம்.

மலையும் மலையைச் சார்நாடும்

வலிய குறிஞ்சி நிலமாகும் ; அமைந்த காடுங் கொல்லைகளும்

அழகாம் முல்லை நிலமென்ப; நீரும் நீரால் விளைவயல்சேர்

நிலமும் மருத நிலமாகும் ; கடலும் கடல்சேர் நிலமெல்லாம்

கால்செய் நெய்தல் நிலமென்ப ; பகுத்த இவற்றி னுட்சேராப்

பாரே பாலை நிலமாமே.

என்ற பாட்டு இவ் வகுப்பு மாணுக்கர்கட்கு உகந்தது. சிறிது மொழியறிவு பெற்றிருக்கும் இவர்கள் இப் பாட்டின்

த-15