பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 10 தமிழ் பயிற்றும் முறை

பொருளே நன்கு அறிந்து பாடமுடியும் ; நல்ல வாய்மொழிப் பயிற்சியினேயும் பெறுதல் இயலும்.

இத்தகைய பாடல்களைக்கொண்டு பிள்ளைகளே ஒருங்கு சேர்த்தும் பேசும் பயிற்சியினே அளிக்கலாம். நல்ல சந்தத்தில் அமைந்த பாடல்கள் இளஞ்சிருர்களின் உள்ளங்களைக் கவ்வி நிற்கும். பாடல்களிலுள்ள சொற்களின் ஒசையும், பொருளின் இனிமையும், சந்தப்பெருக்கும் குழந்தைகளின் மனத்திற்கு இன்பத்தையும் உற்சாகத்தையும் அளிக்கும். இப் பாடல்களின் மூலம் குழந்தைகள் புதிய சொற்களேயும் புதிய கருத்துக்களையும் கற்றுக்கொள்வர். பிள்ளைகள் சேர்ந்து பாடும்பொழுது தனிப்பட்டவர்களிடம் காணப்பெறும் ஒரு சில குறைகள் மறைந்துபோவதால், எல்லோருமே கூச்சமின்றிச் சேர்ந்து பாடுதலில் பங்குகொள்வர். வகுப்புக்கேற்றபடி பாடல்களைப் பொறுக்கி எடுத்து ஆசிரியர் வாய்மொழிப் பயிற்சி அளித்தால் நல்ல பலனேக் காணலாம். வீடுகளில் பாடப்பெறும் அம்மானே, தாலாட்டு, தெம்மாங்கு, கும்மி, கோலாட்டம் முதலிய பாடல்களே வகுப்புக்கேற்ற முறையில் தொகுக்கலாம். தொடக்கநிலை வகுப்புக்களில் தாலாட்டுப்பாடல்கள், குழந்தைப் பாடல்கள், விடுகதைப் பாடல்கள், நாட்டுப் பாடல்கள் ஆகியவற்றைக்கொண்டு மொழிப் பயிற்சிகள் தரலாம்.

3. கதை சொல்லுதல்

கதை சொல்லுதல் வாய்மொழிப் பயிற்சிக்கு ஓர் ஒப்பற்ற சாதனமாகும். குழந்தைகளுக்குக் கதையிலிருக்கும் விருப்பம் அளவிட முடியாதது. கதைகள் எல்லா நிலை மாணுக்கர்கட்கும் இன்பந்தரக் கூடியவை ; வளர்ந்தவர்களும் முதியோர்களும்கூட, கதைகளில் மனத்தைப் பறிகொடுப்பர். எனவே, இத்தகைய பற்றுதலைத் தரவல்ல ஒரு சாதனத்தை வாய்மொழிப் பயிற்சியில் மிகத் திறமை