பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2 : 3 தமிழ் பயிற்றும் முறை

ஏவலாம். அதைக் குழந்தைகளின் தரமறிந்து படிப்படியாக அமைக்கவேண்டும். சில சமயம் ஆசிரியர் கதையின் இறுதியை மட்டிலும் கூறி, கதையைத் தொடங்கி முடிக்குமாறு ஏவலாம். ஆசிரியர் கதையை ஒரு வாக்கியத்தால் தொடங்கி, மாணுக்கர்கள் ஒவ்வொருவரையும் ஒவ்வொரு வாக்கியமாகச் சொல்லி முடிக்குமாறு கூறலாம். சில சமயம் ஆசிரியர் ஒரு கதையின் சட்டகத்தை மட்டிலும் கூறி, அதிலிருந்து கதையை வளர்க்கும்படித் தூண்டலாம்.

கதை சொல்லுவதன் நோக்கம் : இளஞ்சிருர்களுக்கு. மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் அளிப்பதே கதை சொல்லுவதன் முக்கிய நோக்கமாகும். இதல்ை குழந்தைகளுக்குப் படிப்பிலும் பள்ளியின்பாலும் ஆர்வம் உண்டாகும். கதைகள் குழந்தைகளின் அறிவினை வளர்க்கும் ; ஒழுக்கத்தைச் சீர்படுத்தும் ; இறை யுணர்ச்சியை ஊட்டும் ; முருகுணர்ச்சிகளை எழுப்பி எல்லேயற்ற மகிழ்ச்சியை உண்டாக்கும். குழந்தைகள் கோவையாகப் பேசவும் எழுதவும் பழகுவதற்குக் கதைகள் சிறந்த கருவிகளாக உதவும். சிறு குழந்தைகளிடம் எண்ண வளர்ச்சி, கற்பனை ஆற்றல், நினைவாற்றல் ஆகியவற்றை வளர்க்கக் கதைகள் பெரிதும் பயன்படும். சிறந்த கதைகளேத் கேட்பதல்ை குழந்தைகளின் மன உணர்ச்சிகளுக்குப் பயிற்சிகள் உண்டாகும் ; அவர்கள் புதிய கற்பனே ஒவியங்களுடன் அறிமுகம் செய்யப் பெறுவர். மனமும் கருத்துக்களும் ஒன்றுபட்டுக் கதைப் போக்கில் ஈடுபடுவதனுல் குழந்தைகளின் கவனிக்கும் திறன் வளரும். *

புதிய சொற்களைக் கற்பதற்கும், சொல்லறிவைப் பெருக்கிக் கொள்வதற்கும் கதைகள் சிறந்த கருவிகளாக உதவுகின்றன. கதை சொல்லுவதைக் குழந்தைகள் ஆர்வத்துடன் விரும்பிக் கேட்பதால் அதை மொழிப் பயிற்சிக்குச் சாதகமாக்கிக் கொள்ளலாம். தாங்கள் கேட்ட கதைகளேயே குழந்தைகள் திரும்பவும் தம் வாக்கில் வைத்துச் சொல்வதால் நினைவாற்றல் முதலியவை வளர்வ