பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 தமிழ் பயிற்றும் முறை

தேவதைகள் வருவதும் போவதும் வரங்கள் தருவதும் போன்ற நிகழ்ச்சிகளே வருணிக்கும் கதைகளும் குழந்தைகளின் கனவுலகக் காட்சிகளே முற்றுப்பெறச் செய்யும். இராமாயணம், பாரதம், பாகவதம், விவிலியம், பெரியபுராணம் ஆகியவற்றிலுள்ள புராணக்கதைகள் வயதுவந்த மாணுக்கர்களுக்குப் பொருத்தமானவைகளாக இருக்கும். நாட்டுக் கதைகள் (Folk tales), வரலாற்றுக் கதைகள், வாழ்க்கை. வரலாறுகள், தன் வரலாறுகள், (Auto biographes) பிறநாட்டுக் கதைகள், இயற்கைப் பாடக்கதைகள், பிரயாணக் கதைகள், கலிவரின் கடல் யாத்திரை, ராபின்சன் குருசோ, சிந்துபாத்தின் கதைகள் போன்ற துணிகரச் செயல்களைச் சித் திரிக்கும் கதைகள், தென்னுலிராமன் கதைகள் போன்ற நகைச்சுவை தரும் கதைகள் ஆகியவை நடுநிலை, உயர்நிலைப்பள்ளி மாளுக்கர்களுக்கு ஏற்றவை. எந்தக் கதைகளாக இருந்தாலும் கதையின் போக்கும், நடையின் தன்மையும் விறுவிறுப்பாக இருக்கவேண்டும். இளம் வயதில் அச்சத்தை ஊட்டக்கூடிய பேய்க் கதைகளையும் துன்பமாக முடிவுறும் கதைகளையும் நீக்கலாம்; நீக்குதல் நன்று.

ஆசிரியரின் ஆயத்தம்: கதை சொல்லுவதற்கும் ஆசிரியரின் ஆயத்தம் மிகவும் இன்றியமையாதது. கதை சொல்லும் ஆசிரியர் உற்சாகமாகவும், முகமலர்ச்சியுடனும், மகிழ்ச்சி யுடனும் இருக்கவேண்டும். இன்றேல், குழந்தைகளுக்குக்கதைகளை ஊட்டமுடியாது. ஆசிரியர் தம்மை மறந்து கதை சொன்னுல்தான் குழந்தைகள் உற்சாகமாக அவற்றைக் கவனிப்பர். தான் ஆசிரியர் ’ என்ற உணர்ச்சியை விட்டு வீட்டிலுள்ள பாட்டியின் நிலையிலிருந்துகொண்டு பரிவுடனும் அன்புடனும் கதைகளைச் சொல்லவேண்டும். சொல்லப்போகும் கதை ஆசிரியருக்கு நன்கு தெரிந்திருக்கவேண்டும். கதைகளின் உட்கருத்துக்களையும் அமைப்புக்களேயும் உணராது கதைகளைச் சுவையுடன் சொல்ல. இயலாது. கற்பனே ஆற்றல், வருணிக்கும் திறன் பொருந்திய ஆசிரியர்கள்தாம் இப்பணிக்கு எம் முறையிலும் ஏற்றவர்கள்