பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாய்மொழிப் பயிற்சி 215

வருணனைகளை விளக்கும்பொழுது அவை உண்மையானவை போலத் தோன்றச் செய்யவேண்டும். கதையிலுள்ள பல நிகழ்ச்சிகள், அவை நடக்கும் களன், அங்குள்ள மக்களின் வாழ்க்கை, அவர்களுடைய பழக்க வழக்கங்கள் முதலிய அனேத்தையும் ஆசிரியர் நன்கு தெரிந்துவைத்துக் கொள்ள வேண்டும். வகுப்புக்கும் குழந்தைகளின் பட்டறிவுக்கும் ஏற்ற கதைகளைத் தேர்ந்தெடுத்து அவற்றை எளிய இனிய நடையில் சொல்லுவதற்கேற்றவாறு ஆயத்தம் செய்துகொள்ள வேண்டும். சில சமயம் சொல்லும் முறையில் எழுதியும் பழகிக்கொள்ள வேண்டிவரும் ; தமக்குத்தானே வாய்விட்டுச் சொல்லியும் பழகிக்கொள்ளலாம். புத்தகத்திலிருப்பதுபோல் கதைகளே நெட்டுருச் செய்து ஒப்புவித்தலால் பயன் இராது. வேண்டுமானுல் சில பகுதிகளே அவற்றின் நயம் கொடாமலிருப்பதற்கு நெட்டுருச் செய்து கொள்ளலாம். எல்லாவற்றையும் மனப்பாடம் செய்து சொல்வதால் கிளிப்பிள்ளே சொல்வதுபோல் அமைந்து கேட்போருக்கு உற்சாகம் இராது. சிலசமயம் சிறிய கதைகளைப் பெருக்கியும், பெரிய கதைகளைச் சுருக்கியும் தேவைக்கேற்றவாறு அமைத்துக்கொள்ள வேண்டியிருக்கும். அவசியமான பகுதிகளை விளக்கக் கூடிய படங்களே முன்னரே வரைந்து வைத்துக்கொண்டால் நலம் ; தேவையுள்ள இடங்களில் கரும்பலகையில் வண்ணச் சுண்ணக்காம்புகளைக் கொண்டு விரைந்து வரையும் ஆற்றல் பெற்றிருந்தால் மிகவும் நலம்.

ஆசிரியர் கதைச்சொல்லும் முறை : கதை சொல்லுவதற்கு முன் ஆசிரியர் குழந்தைகளுடன் உரையாடி கதை கேட்பதற்கு அவர்களது மனத்தைப் பக்குவப்படுத்த வேண்டும். அவ்வாறு செய்வதால், குழந்தைகள் கதை கேட்பதற்கு ஆவலாகவும் உற்சாகத்துடனும் இருப்பர். கதையைப் புத்தகங்களிலிருந்து அப்படியே படிப்பதைவிட சொல்லுவதுதான் நல்லது. குழந்தைகளின் முகத்தைப் பார்த்து உயிர்த் தன்மையுடனும் உற்சாகத்துடனும் வாய்மொழியாகக் கதைகளைச் சொன்னுல் அவை நிறைந்த பயனே